2024 தீபாவளி தீயா இருக்கே.. 6 OnePlus போன்கள் மீது முரட்டு ஆஃபர்.. அடிச்சு புடிச்சு ஆர்டர் போட்றாங்க!
எந்தவொரு தீபாவளியை விடவும் இந்த 2024 தீபாவளியானது அதிசிறப்பாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ், ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது, ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமன்றி அதன் ஒட்டுமொத்த தயாரிப்புகளின் மீதும் முரட்டு ஆபர்களை அறிவித்துள்ளது. அவைகளில் 5 ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களும் அடங்கும். அதென்ன மாடல்கள்? வேறு என்னென்ன தயாரிப்புகள் மீது ஆபர் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் அறிவித்துள்ள தீபாவளி ஆபர்கள் எந்தெந்த வலைத்தளங்கள், ஸ்டோர்கள் வழியாக அணுக கிடைக்கும்? எப்போது முடியவடையும்? ஒன்பிளஸ் அறிவித்துள்ள எல்லா ஆபர்களுமே - ஒன்பிளஸ் இந்தியா இணையதளம், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் ஆகியவைகளில் மட்டுமின்றி அமேசான் இந்தியா வழியாகவும் அணுக கிடைக்கும்.

மேலும் ரிலையன்ஸ் டிஜிட்டல், பஜாஜ் எலெக்ட்ரானிக்ஸ், க்ரோமா, விஜய் சேல்ஸ், பூர்விகா, சங்கீதா மொபைல்ஸ், பாய் எலெக்ட்ரானிக்ஸ், பிக் சி மொபைல்ஸ் மற்றும் லாட் மொபைல்ஸ் உள்ளிட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களில் இருந்து ஒன்பிளஸ் டிவைஸ்களை வாங்கும் போதும் கூட, ஒன்பிளஸ் தீபாவளி விற்பனை ஆபர்களை (OnePlus Diwali Sale Offer) பெறலாம். ஒன்பிளஸ் தீபாவளி விற்பனை ஆனது நவம்பர் 5 ஆம் தேதியுடன் நிறைவடையும்.
01. ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R): இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.39,999 ஆகும். இருப்பினும் இது ரூ.35,999 என்கிற நேரடி தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். கூடுதலாக கிடைக்கும் வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.32,999 ஆக குறைக்க முடியும்.
02. ஒன்பிளஸ் 12 (OnePlus 12): இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.64,999 ஆகும். இருப்பினும் இது ரூ.61,999 என்கிற நேரடி தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். கூடுதலாக கிடைக்கும் வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.54,999 ஆக குறைக்க முடியும்.
03. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4): இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.24,999 ஆகும். இருப்பினும் இது ரூ.22,999 என்கிற நேரடி தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். கூடுதலாக கிடைக்கும் வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.21,499 ஆக குறைக்க முடியும்.
04. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் (OnePlus Nord CE 4 Lite): இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.19,999 ஆகும். இந்த மாடல் மீது நேரடி தள்ளுபடி எதுவும் கிடைக்கவில்லை. இது அதே ரூ.19,999 க்கு தான் வாங்க கிடைக்கும். ஆனால் கூடுதலாக கிடைக்கும் வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனின் விலையை ரூ.18,499 ஆக குறைக்க முடியும்
05. ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4): இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.22,999 ஆகும். இருப்பினும் இது ரூ.27,999 என்கிற நேரடி தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். கூடுதலாக கிடைக்கும் வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.25,999 ஆக குறைக்க முடியும்.
மற்ற ஒன்பிளஸ் டிவைஸ்கள் மீதான ஆபர்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) மாடல் ஆனது ரூ.39,999 என்கிற அசல் விலைக்கு பதிலாக ரூ.34,999 க்கு வாங்க கிடைக்கும். ஒன்பிளஸ் நோர்ட் 3 ப்ரோ (OnePlus Nord Buds 3 Pro) ஆனது ரூ.3,299 என்கிற அசல் விலைக்கு பதிலாக ரூ.2,499 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 (OnePlus Buds Pro 3) ஆனது ரூ.11,999 என்கிற அசல் விலைக்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் (OnePlus Watch 2R) ஆனது ரூ.17,999 என்கிற அசல் விலைக்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








