Home
Mobile

ரெடியா இருங்க.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.. iPhone-களுக்கு வரும் 6 புதிய அம்சங்கள்!

நீங்களொரு ஐபோன் (iPhone) யூசராக இருந்தால், அடுத்த ஐஓஎஸ் அப்டேட்டிற்கான (Next iOS Update) உங்களுடைய காத்திருப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே கூறலாம். ஏனென்றால் ஆப்பிள் (Apple) அதன் ஐஓஎஸ் 16.4-ஐ டெவலப்பர்ஸ் மற்றும் சில பப்ளிக் பீட்டா டெஸ்டர்களுக்கு வெளியிட்டுள்ளது. இது டெஸ்டர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள 4-வது பீட்டா வெர்ஷனாகும்.

நினைவூட்டும் வண்ணம் கடந்த வாரம் தான் (மார்ச் 16) ஐஓஎஸ்16.4-இன் 3வது பப்ளிக் பீட்டா வெளியானது. ஆப்பிளின் இந்த வேகத்தை பார்க்கும் போது ஐஓஎஸ் 16.4-இன் பரந்த வெளியீடு கூடிய விரைவில் நடக்கும் என்பது போல் தெரிகிறது. வரவிருக்கும் ஐஓஎஸ் 16.4 அப்டேட்டின் கீழ் ஒவ்வொரு ஐபோன் யூஸரும் கவனிக்க வேண்டிய 5 முக்கியமான புதிய அம்சங்கள் உள்ளன:

ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.. iPhone-களுக்கு வரும் 5 புதிய அம்சங்கள்!

01. புதிய ஈமோஜிக்கள்: ஐஓஎஸ் 16.4 அப்டேட்டின் வழியாக உங்களுடைய ஐபோனிற்கு 20 க்கும் மேற்பட்ட புதிய ஈமோஜிக்கள் (Emojis) கொண்டு வரப்படும். அதில் புதிய ஸ்மைலி; கடமான் மற்றும் வாத்து போன்ற சில புதிய விலங்குகள்; இளஞ்சிவப்பு மற்றும் வெளிர் நீலம் போன்ற புதிய ஹார்டின்ஸ் மற்றும் வைஃபை சிக்னல் போன்றவைகளும் அடங்கும்.

02. போன் கால்களின் போது வாய்ஸ் ஐசோலேஷன்: ஃபேஸ்டைம் கால்களுக்காக, ஆப்பிள் ஒரு வாய்ஸ் ஐசோலேஷன் அம்சத்தை கொண்டுள்ளது. இது பயனர்கள் பேசும் போது அவர்களை சுற்றியுள்ள சுற்றுப்புற சத்தத்தை தடுக்குமொரு அம்சமாகும். இந்த அம்சம், ஐஓஎஸ் 16.4 வழியாக போன் (வாய்ஸ்) கால்களுக்கும் வருகிறது.

03. ஆப்பிள் மியூசிக் கிளாசிக்கல் ஆப்: ஆப்பிள் இம்மாத தொடக்கத்தில் ஒரு புதிய கிளாசிக்கல் மியூசிக் ஆப்பை அறிவித்தது. வரவிருக்கும் ஐஓஎஸ் 16.4 உடன், ஐபோன் பயனர்கள் குறிப்பிட்ட ஆப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆப் ஆயிரக்கணக்கான கிளாசிக்கல் பாடல்களை உங்கள் ஐபோனுக்கு கொண்டு வரும்.

04. பேஜ்-டர்னர் அம்சம்: வரவிருக்கும் ஐஒஸ் 16.4 அப்டேட், ஆப்பிள் புக்ஸில் (Apple Books) பேஜ்-டேர்னிங் அனிமேஷனை (அதாவது பக்கத்தை திருப்பும் அனிமேஷனை) மீண்டும் கொண்டு வர உள்ளது. நினைவூட்டும் வண்ணம், ஐஓஎஸ் 16-இல் புக்ஸ் ஆப் ஆனது மறுவடிவமைப்பு செய்யப்பட்டதன் விளைவாக இந்த அம்சம் ஐபோனில் இருந்து அகற்றப்பட்டது; இப்போது மீண்டும் வருகிறது.

05. புதிய கீபோர்ட்ஸ், சிரி வாய்ஸ் மற்றும் லேங்குவேஜ் அப்டேட்: ஐஓஎஸ் 16.4 அப்டேட் வழியாக Choctaw மற்றும் Chickasaw மொழிகளுக்கான கீபோர்ட்ஸ் சேர்க்கப்படும்; மேலும் அரபு மற்றும் ஹீப்ரு மொழிகளுக்கான ஆதரவை வழங்கும் சிரி குரல்களும் சேர்க்கப்படும்; கடைசியாக கொரியன், உக்ரேனியன், குஜராத்தி, பஞ்சாபி மற்றும் உருது மொழிகளுக்கான லேங்குவேஜ் அப்டேட்டும் கிடைக்கும்.

ஐஓஎஸ் 16.4 அப்டேட் எப்போது அனைவருக்கும் வெளியிடப்படும்? ஆப்பிளின் ஐஓஎஸ் 16.4 அப்டேட் ஆனது எப்போது பொது மக்களுக்கு வெளியிடப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதுவொருபக்கம் இருக்க, பீட்டா வெர்ஷன்களில் கிடைக்கும் எல்லா அம்சங்களும் ஐஓஎஸ் 16.4 பப்ளிக் அப்டேட்டில் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
5 New Features Including New Emojis Page Turner That Coming To iPhone Soon Via iOS 16 4 Update
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X