எழுதி வச்சிக்கோங்க.. 2023-ன் முதல் 6 மாசம் இந்த 5 போன்களும் தான் டாப்பு.. மத்ததெல்லாம் டூப்பு!

|

நாம் அனைவருமே 2022 ஆம் ஆண்டின் கடைசி கட்டத்தில் நிற்கிறோம். அதுமட்டுமன்றி வருகிற 2023 ஆம் ஆண்டை 5ஜி ஸ்மார்ட்போன்களின் பொற்காலம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு எக்கச்சக்கமான 5ஜி மொபைல் போன்கள் ஆனது இந்திய சந்தையில் வந்து குவிய உள்ளன. இந்த இடத்தில் தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

அதாவது 2023 ஆம் ஆண்டு தொடங்கிய வேகத்திலேயே, இந்தியாவில் நிறைய 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன. அதில் எதை தேர்வு செய்ய வேண்டும் என்கிற தெளிவு உங்களுக்கு இருக்க வேண்டும்; இல்லையென்றால் நீங்களொரு தவறான போனை வாங்கிவிட கூடும். அந்த தெளிவை வழங்கும் நோக்கத்தின் கீழ் தான் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதாவது 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அறிமுகமாகும் டாப் 5 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:

2023ன் முதல் 6 மாசம் இந்த 5 போன்களும் தான் டாப்பு மத்ததெல்லாம் டூப்பு!

முதலாவது ஸ்மார்ட்போன் - ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் (Redmi Note12 Pro Plus) ஆகும். இது வருகிற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரெட்மி நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 200 மெகாபிக்சல் மெயின் ரியர் கேமராவை பேக் செய்யும். மேலும் இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான ஆதரவுடன் 6.67 இன்ச் அளவிலான FHD+ OLED டிஸ்ப்ளேவையும் பேக் செய்யும்.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிசைனில் உட்பொதிக்கப்பட்ட 16MP செல்பீ கேமராவை கொண்டிருக்கும். இது MediaTek Dimensity 1080 ப்ராசஸர் மூலம் இயக்கப்படும். இது 120W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். ஸ்டோரேஜை பொறுத்தவரை, Redmi Note 12 Pro+ ஆனது 8GB/256GB மற்றும் 12GB/256GB என்கிற 2 ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும். தவிர இது USB Type-C போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டிருக்கும்.

2-வது ஸ்மார்ட்போன் - ஐக்யூ 11 5ஜி (iQOO 11 5G) ஸ்மார்ட்போன் ஆகும். இது வருகிற ஜனவரி 10 ஆம் தேதியன்று, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அம்சங்களை பொறுத்தவரை, iQOO 11 ஆனது Qualcomm-இன் புதிய Snapdragon 8 Gen 2 சிப்செட்டை பேக் செய்யும். மேலும் இது QHD+ ரெசல்யூஷனை வழங்கும் 6.78-இன்ச் அளவிலான AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்; இதுவொரு 144Hz டிஸ்பிளேவும் கூட!

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஐக்யூ 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும். அது 120W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும். கேமராக்களை பொறுத்தவரை, இதன் ரியர் கேமரா செட்டப்பில் OIS-க்கான ஆதரவை வழங்கும் 50 மெகாபிக்சல் Samsung GN5 மெயின் சென்சார் + 8 மெகாபிக்சல் எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2x ஆப்டிகல் ஜூம் லென்ஸுடன் கூடிய 13 மெகாபிக்சல் சென்சார் இடம்பெறும்.

3-வது ஸ்மார்ட்போன் - சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் (Samsung Galaxy S23 Series) ஆகும். இது வருகிற 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கீழ் மொத்தம் 3 மாடல்கள் வெளியாகும், அது எஸ்23, எஸ்23 பிளஸ் மற்றும் எஸ்23 அல்ட்ரா ஆகும். அம்சங்களை பொறுத்தவரை, இந்த மூன்று மாடல்களுமே Snapdragon 8 Gen 2 SoC மூலம் இயக்கப்படும். குறிப்பாக Samsung Galaxy S22 Ultra ஆனது 8K வீடியோவை பதிவு செய்யும் திறனுடன் வரும்!

4-வது ஸ்மார்ட்போன் - ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) ஆகும். முந்தைய வெளியீடுகளின்படி பார்த்தால், இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்சங்களை பொறுத்தவரை, OnePlus 11 ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் ஆனது 10 Pro மாடலில் இருப்பதை போலவே இருக்கலாம். ஆனால், அது சதுர வடிவத்திற்கு பதிலாக வட்ட வடிவத்தில் இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm-ன் பவர்ஃபுல் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 Gen 2 SoC இடம்பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை!

5-வது ஸ்மார்ட்போன் - சியோமி 13 (Xiaomi 13) ஆகும். இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; ஆனால் சரியான அறிமுக தேதி குறித்து எந்த தகவலும் இல்லை. முன்னதாக Xiaomi 12 சீரீஸின் கீழ் அறிமுகமான Pro மாடல் மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், அதே வழக்கம் இம்முறையும் பின்பற்றப்படலாம். அதாவது இந்தியாவில் Xiaomi 13 Pro மாடல் மட்டுமே அறிமுகம் செய்யப்படலாம்.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் டிஸ்பிளேவை பேக் செய்யும். கேமராக்களை பொறுத்தவரை, இது மூன்று 50 மெகாபிக்சல் கேமராக்களை (வைட் + அல்ட்ரா-வைட் + டெலிஃபோட்டோ) கொண்டிருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடனான 4820mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். கடைசியாக இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸர் மூலம் இயக்கப்படும்.

Best Mobiles in India

English summary
5 New 5G Smartphones to Look Out Which Are Ready To Launch in Early 2023 in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X