நல்லவேளை வேற போன் வாங்கல.. மொத்த இந்தியாவும் இந்த 5 புது போன்களுக்காக தான் வெயிட்டிங்.. இதோ லிஸ்ட்!
2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து.. ஒரு நல்ல புதிய ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற உங்களுடைய திட்டம், தள்ளிக்கொண்டே போகிறதா? பரவாயில்லை.. அதுவும் நல்லதுக்கே! ஏனென்றால் இனிமேல் தான் சில தரமான ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
அப்படியாக பட்ஜெட் மற்றும் மிட் ரேஞ்ச் முதல் பிரீமியம் செக்மென்ட் வரையிலாக.. கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள 5 புதிய ஸ்மார்ட்போன்களின் பட்டியலும், என்னென்ன மாடல்கள் என்ன விலைக்கு வரும்.. அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்கிற விவரங்களும் இதோ:

01. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4): இது ஏப்ரல் 1 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம், 256ஜிபி வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ், 100W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.
மேலும் இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான எட்ஜ்-டு-எட்ஜ் 1.5கே ரெசல்யூஷன் டிஸ்பிளே, இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், யூஎப்எஸ் 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான ஆக்சிஜென் ஓஎஸ் 14 போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கும். விலையை பொறுத்தவரை, இது இது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

02. மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ (Moto Edge 50 Pro): இது ஏப்ரல் 3 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படும். மேலும் வேகன் லெதர் பேனல் மற்றும் மெட்டல் ஃபிரேம் உடனான பிரீமியம் டிசைனை கொண்டிருக்கும். டிஸ்பிளேவை பொறுத்தவரை, 1.5கே ரெசல்யூஷன், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான கர்வ்டு OLED பேனல் இடம்பெறும்.
கேமராவை பொறுத்தவரை, 8கே வீடியோ பதிவுக்கான ஆதரவுடன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். கடைசியாக இது 125W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை பேக் செய்யும். இது ரூ.60,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

03. சாம்சங் கேலக்ஸி எம்55 (Samsung Galaxy M55): சாம்சங் கேலக்ஸி ஏ35 மற்றும் கேலக்ஸி ஏ55 மாடல்களை அறிமுகப்படுத்திய சில நாட்களில், சாம்சங் நிறுவனம் மற்றொரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இது எம் சீரீஸின் கீழ் கேலக்ஸி எம்55 மாடலை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 7 ஜென்n 1 சிப்செட், 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், அதில் 50எம்பி அல்லது 64எம்பி மெயின் கேமரா, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான OneUI 6.1 ஓஎஸ் போன்றவைகளை கொண்டிருக்கலாம். விலையை பொறுத்தவரை, இந்தியாவில் இது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
04. ரியல்மி ஜிடி 5 ப்ரோ (Realme GT 5 Pro): இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதியும் கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இது கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம். ரியல்மி நிறுவனத்தின் இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஐக்யூ 12 (iQOO 12) அல்லது ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போன்ற அம்சங்களை கொண்டுள்ளது!
ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகிவிட்ட இந்த ஸ்மார்ட்போன் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5400mAh பேட்டரி, 6.7-இன்ச் கர்வ்டு டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. விலையை பொறுத்தவரை, இந்தியாவில் இது ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
05. கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a): கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும் கூட இது மே 14 ஆம் தேதி அன்று நடக்கும் டெவலப்பர்கள் மாநாட்டில் (Google I/O 2024) இதை அறிமுகம் செய்ய அதிக வாய்ப்புள்ளது.
இது டென்சர் ஜி3 சிப்செட், கூகுளின் சிறந்த ஏஐ அம்சங்களுடன் சிறந்த ஆண்ட்ராய்டு எக்ஸ்பீரியன்ஸ், 6.1-இன்ச் 120ஹெர்ட்ஸ் OLED டிஸ்பிளே, 64எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 13எம்பி செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு 14 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம். இந்தியாவில் இது ரூ.50,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








