இதெல்லாம் ஐபோன் அம்சங்கள் என்று கூறினால் நம்புவீர்களா..?

By Lekhaka
|

ஸ்மார்ட்போன் என்பது தற்போது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒரு அங்கமாகிவிட்டது. ஸ்மார்ட்போன் இல்லாத ஒரு மனித வாழ்க்கையை இனிமேல் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. ஸ்மார்ட்போனே இப்படி என்றால் ஐபோன் குறித்து கூற தேவையே இல்லை.

இதெல்லாம் ஐபோன் அம்சங்கள் என்று கூறினால் நம்புவீர்களா..?

ஐபோன் வைத்திருக்கும் பலர், தங்களது பொன்னான நேரத்தை ஐபோனை இயக்குவதிலேயே செயல்படுகின்றனர். இருந்தும் ஐபோன்களில் உள்ள வசதிகள் அனைத்தையும் பலர் தெரிந்து வைத்திருப்பதில்லை.

சியோமி ரெட்மீ நோட் 4 : ரூ.9,999/-க்கு இந்தியாவில் அறிமுகம்.!

ஒவ்வொரு iOS அப்டேட்டிலும் ஆப்பிள் நிறுவனம் பலவிதமான வசதிகளை கூடுதலாக உருவாக்கி வருகிறது. இந்த வசதிகளை ஒருசிலர் மட்டுமே சரியாக அறிந்து பயன்படுத்தி வருகின்றனர்.

பப்ளிக் வைபையை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

பெரும்பாலானோர் இப்படி ஒரு வசதி இருப்பதையே தெரியாமல் ஐபோன்களை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்காக இந்த கட்டுரையில் ஐபோன்களில் நீங்கள் அறியாத ஒருசில ரகசியங்கள் குறித்து பார்ப்போம்

உங்கள் ஐபோன் பேசும் என்பது உங்களுக்கு தெரியுமா?

உங்கள் ஐபோன் பேசும் என்பது உங்களுக்கு தெரியுமா?

கிளிப்பிள்ளை நாம் சொன்னதை திரும்ப சொல்லும் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் உங்கள் ஐபோனில் ஒரு வார்த்தையை செலக்ட் செய்தால் அந்த வார்த்தையை ஐபோன் குரலால் கொடுக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் இது உண்மைதான்.

இந்த வசதியை நீங்கள் பெற வேண்டும் எனில் Settings > General > Accessibility > Speech and turn on the "Speak Selection" toggle என்பதை செய்ய வேண்டும். இதை செய்து முடித்துவிட்டு நீங்கள் ஐபோனில் எந்த வார்த்தையை செலக்ட் செய்கின்றீர்களோ அந்த வார்த்தையை உங்கள் ஐபோன் பேசும்

ஐபோன் ஸ்பீடு ஆக இயங்க என்ன செய்ய வேண்டும்?

ஐபோன் ஸ்பீடு ஆக இயங்க என்ன செய்ய வேண்டும்?

ஐபோன் உபயோகிப்பவர்கள் அனைவருமே அந்த போன் ஸ்பீடு ஆக இயங்க வேண்டும் என்பதில் கருத்தாக இருப்பார்கள். ஸ்மூத் ஆகவும், ஸ்பீடாகவும் ஒரு ஐபோன் இயங்க வேண்டும் என்றால் அதில் உள்ள அனிமேஷன் வகைகளை குறைக்க வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும்.

இதை மட்டும் செய்துவிட்டால் உங்கள் ஐபோன் நீங்கள் எதிர்பாராத ஸ்பீடை அடைந்துவிடும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது Settings > General > Accessibility > Reduce Motion and turn off the toggle என்பது மட்டுமே

கேமிராவை உடனே ஆன் செய்ய என்ன செய்ய வேண்டும்?

கேமிராவை உடனே ஆன் செய்ய என்ன செய்ய வேண்டும்?

ஐபோன் கேமிரா குறித்து யாரும் விவாதம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. மிக அபாரமான நவீன டெக்னால்ஜியுடன் கூடிய இந்த கேமிராவை ஹோம் பட்டனில் இருந்தோ அல்லது நீங்கள் எங்கு இருந்தாலும் உடனே ஆன் செய்ய வேண்டும் என்றால் ஜஸ்ட் நீங்கள் மூன்று முறை ஐபோன் ஸ்க்ரீனை டேப் செய்தால் போதும்.

உங்கள் கேமிரா ஆன் ஆகிவிடும். திடீரென ஒரு எதிர்பாராத காட்சியை புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் இந்த ஷார்ட்-கட்-ஐ நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

போட்டோவில் டூடுல் வேண்டுமா? இதோ ஒரு ஷார்ட் கட் வழி:

போட்டோவில் டூடுல் வேண்டுமா? இதோ ஒரு ஷார்ட் கட் வழி:

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சேட் ஆகியவற்றில் புகைப்படங்களை பதிவு செய்யும்போது அதில் டூடுல் இணைப்பது என்பது தற்போது ஒரு பேஷனாகி வருகிறது. ஆனால் இதற்காக நீங்கள் ஒரு குறிப்பிட்டி ஆப்-ஐ அணுக வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் ஐபோனிலேயே புகைப்படத்தில் டூடுல் அமைக்கும் வசதி உள்ளது.

ஒரு போட்டோவை செலக்ட்ச் எய்து அதில் இடது ஓரத்தில் மூன்று புள்ளிகளுடன் கூடிய ஒரு சர்க்குலர் பட்டன் இருக்கும். அதை க்ளிக் செய்து அதில் வரும் 'மார்க் அப்' என்ற ஆப்சனை அழுத்திவிட்டால் உங்கள் புகைப்படத்தில் டூடுல் தோன்றும். பின்னர் அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.

போனிலேயே இருக்கும் ஆப்ஸ்களை டெலிட் செய்வது எப்படி?

போனிலேயே இருக்கும் ஆப்ஸ்களை டெலிட் செய்வது எப்படி?

நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினாலும், ஐபோன் வாங்கினாலும் அதில் ஏற்கனவே ஒருசில ஆப்ஸ்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். இந்த ஆப்ஸ்களை ஸ்மார்ட்போனில் டெலிட் செய்ய முடியாது. ஆனால் ஆப்பிள் ஐபோன் iOS 10 இதை அனுமதிக்கின்றது.

ஆப்பிள் ஐபோனில் உள்ள ஆப்ஸ்கள் உங்களுக்கு தேவையில்லை என்று நீங்கள் முடிவு செய்தால் அதை தாராளமாக டெலிட் செய்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்கு தேவையில்லாத ஆப்-இன் மீது பிரஸ் செய்ய வேண்டும். அந்த ஆப்பின் ஐகான் இடது மேல் புறத்தில் தோன்றும். அதை ஒரு அழுத்து அழுத்திவிட்டால் அந்த ஆப் டெலிட் ஆகிவிடும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple iPhone is full of hidden features. You just have to figure out a way to access them, and that"s exactly why we are here, to help you figure out them.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X