Subscribe to Gizbot

16எம்பி செல்பீ கேம், 3ஜிபி ரேம் - அடித்து நொறுக்கும் ஏ57.!

Written By:
உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி எந்த செயல்பாட்டிற்காக அதிக அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளதை என்று சோதித்து பார்த்தல் கேமரா என்று காட்டினால், ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை - அதற்கு காரணம் ஒவ்வொரு நாளும் நாம் எடுத்து தள்ளும் செல்பீகள் முக்கியமான காரணமாக இருக்கலாம்

அப்படியாக அனைவரும் நன்கு "கிளிக்கி கிளிக்கி" பழகிய செல்பீகளுக்கான அறிமுகம் யாருக்குமே தேவையில்லை. ஆனால் ஒப்போ கருவிகளை ஏன் செல்பீ ஸ்பெஷலிஸ்ட் என்று கூறுகிறார்கள் என்பதை பற்றி இங்கு கூறியே ஆக வேண்டும். அடுத்த செல்பீ எடுக்கும் முன்பு இதை நீங்கள் தெரிந்துகொள்வது நல்லது.!

செல்பீ ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கபப்டும் ஒப்போ ஏ57 கருவி எதனால் இப்படியொரு பெயர், அப்படி என்ன ஸ்பெஷல் அம்சங்கள் உள்ளன என்பதை விளக்கும் காரணங்கள் பற்றிய தொகுப்பே இது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
16எம்பி செல்பீ கேமரா

16எம்பி செல்பீ கேமரா

ஒப்போ ஏ57 கருவி ஒரு புரட்சிகரமான 16எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது. இந்த முன்பக்க கேமராவானது பிரத்தியேகமாக பொருத்தமில்லாத ஒளி நிலைமைகளை சரி செய்து செல்பீ எடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற ஸ்மார்ட்போன் கேமராக்களுடன் ஒப்பிடும்போது இதன் பெரியபோட்டோ சென்சார் ஆனது பொதுவாக கிடைக்கும் ஒளியை விட நான்கு மடங்கு அதிக பிரகாசமான மற்றும் துடிப்பான செல்பீக்களை உங்களுக்கு வழங்கும்.

புதுமையான பால்ம் ஷட்டர் அம்சம்

புதுமையான பால்ம் ஷட்டர் அம்சம்

சமூக தளங்களில் உங்கள் செல்பீகளுக்கான மதிப்பை அதிகரிக்க செய்யும் வண்ணம் இக்கருவியின் முன்பக்க கேமரா பல பிளாக்-இன்ஸ் மற்றும் பில்டர்ஸ் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி செல்பீ எடுக்கையில் கேமரா பயன்பாட்டின் ஷட்டர் பட்டனை கிளிக் செய்ய சிரமமாக கருதுவோர்கள் ஒப்போ நிறுவனடகத்தின் புதுமையான கேமரா தொழில்நுட்பமான பால்ம் ஷட்டர் அம்சம் கொண்டு அதாவது உங்கள் கையை உயர்த்துவதின் மூலம் அழகான செல்பீகளுக்காக எளிமையாக கிளிக் செய்யலாம்.

32ஜிபி உள்ளடக்க நினைவகம்

32ஜிபி உள்ளடக்க நினைவகம்

இந்த கருவியில் சேமிப்பு திறனும் ஒரு முக்கியமான சிறப்பம்சமாகும். ஒப்போ ஏ57 கருவியானது தடுத்த நிறுத்த முடியாத செல்பீக்களை க்ளிக் செய்ய உதவும் வண்ணம் 32ஜிபி உள்ளடக்க சேமிப்பும் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256ஜிபி வரை நீட்டிக்கும் ஆதரவும் வழங்குகிறது.

மூன்று ஸ்லாட்

மூன்று ஸ்லாட்

ஒப்போ ஏ57 கருவியானது, கார்ட்களுக்கான மூன்று தனிப்பட்ட இடங்களை கொண்டுள்ளது. இரண்டு சிம் கார்டு ஸ்லாட்கள் மற்றும் ஒரு மெமரி கார்ட் ஸ்லாட் வழங்குகிறது.

மின்னல் வேக பிங்கர் ப்ரிண்ட் அன்லாக்

மின்னல் வேக பிங்கர் ப்ரிண்ட் அன்லாக்

ஏ57 அக்கருவி நீங்கள் எந்தவிதமான பாதுகாப்பு மீறலையும் எதிர்கொள்ள மாடீர்கள் என்பதையும், உங்கள் தகவல்கள் எப்போதும் பாதுகாப்பான முறையில் உள்ளது என்பதையும் உறுதி செய்யும் வண்ணம் ஒரு கண் சிமிட்டும் நேர அணுகலை வழங்கும் ஒரு மின்னல் வேக பயோமெட்ரிக் சென்சார் அம்சத்தை ஹோம் பட்டனில் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 6.0

ஆண்ட்ராய்டு 6.0

புதுமையான கேமரா வன்பொருளை கொண்டுள்ள ஒப்போ ஏ57 அதற்கேற்ற ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோவை அடிப்படையாக கொண்ட இன்டிடிவ் கலர்ஓஎஸ் 3.0 மூலம் இயங்குகிறது மற்றும் பயனர் இடைமுகம், கண் கவரும் அனிமேஷன் ஆகியவைகள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் மற்றொரு நிலைக்கு உங்களை அழைத்து செல்லும்.

ஆகப்பெரிய 3ஜிபி ரேம்

ஆகப்பெரிய 3ஜிபி ரேம்

அது தவிர நீங்கள் இந்த கைபேசியில் ஒரே நேரத்தில் பல பயன்பாடுகளை இயக்க அனுமதிக்கும் வண்ணம் 3ஜிபி ரேம் உள்ளது இதனால் ஒப்போ ஏ57 செயல்திறன் ஆனது மெதுவாக இயங்க வாய்ப்பு குறைவு.

பிரீமியம் மற்றும் வலிமையான டிசைன்

பிரீமியம் மற்றும் வலிமையான டிசைன்

இறுதியாக ஒப்போ ஏ57 கருவியின் வடிவமைப்பு, மிகவும் ஸ்டைலான அதே சமயம் ஆயுள் மிக்க ஒரு பிரீமியம் கலப்பு உலோக வடிவமைப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆனது உங்கள் வாழ்க்கைமுறையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சரியான தேர்வாக திகழும்.

ஒரு கையால் செயல்பாடு

ஒரு கையால் செயல்பாடு

தவிர, அதிக பணிச்சூழலியலான இடத்தில ஒரு கையால் செயல்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படியாக எல்லாம் இணைத்து ஒப்போ ஏ57 ஒரு பிரத்தியேகமான செயல்திறன் கொண்ட ஸ்டைல் விரும்பிகளுக்கான (செல்பீ காதலர்களுக்கான) டிசைன் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

விலை

விலை

ரூ.14,990/- என்ற அம்சங்களுக்கேற்ற விலை நிர்ணயம் கொண்ட இந்த ஒப்போ ஏ57 ஸ்மார்ட்போன் ஆனது ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல் மற்றும் அமேசான்.இன் ஆகிய தளங்களிலும் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஒப்போ சில்லறை விற்பனை கடைக்ளும் கிடைக்கிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

21எம்பி கேமரா கொண்ட சோனி பிக்காச்சு (முழு அம்சங்கள்).!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
5 features that make OPPO A57 the perfect smartphone for unstoppable selfies. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot