மாட்டிக்கிட்ட பங்கு.. கண்டுபிடிச்சிட்டாங்க.. iPhone 17 இல் இதை கவனிச்சீங்களா.. Android யூசர்கள் பொளேர்!
ஐபோன் 17 சீரீஸ் மாடல்களின் முன்பதிவுகள் நல்ல முறையில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து - ஐபோன் 17, ஐபோன் ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 மாடல்களுமே வருகிற செப்.19 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளன.
அதற்கு முன்பாக.. ஐபோன் 17 மாடலை நம்பி வாங்கலாமா, வேண்டாமா? ஐபோன் 17 க்கு பதிலாக வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்? மற்ற நாடுகளில் ஐபோன் 17 சீரிஸின் விலை நிர்ணயம் என்ன? என்பதை பற்றியெல்லாம் நாங்கள் பேசி ஆராய்ந்து விட்டோம்.

அந்த வரிசையில், ஆப்பிள் நிறுவனத்தையும், அதன் சிஇஓ-வான டிம் குக்கையும் பார்த்து "மாட்டிக்கிட்ட பங்கு" என்று கூறும்படியாக.. ஆண்ட்ராய்டில் இருந்து காப்பி அடிக்கப்பட்டு ஐபோன் 17 சீரிஸில் இடம்பெறுள்ள 5 அம்சங்களை (iPhone 17 Features copied from Android) பற்றித்தான் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்.
1. கூகுள் பிக்சலில் இருந்து கேமரா பார்: ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 ப்ரோ மாடலின் கேமரா பம்ப்பை "வியக்கத்தக்க வண்ணம்" மறுவடிவமைப்பு செய்துள்ளது. முன்னதாக இருந்த சிறிய மற்றும் சதுர வடிவிலான கேமரா ஹவுசிங் ஆனது இப்போது ஒரு நீண்ட கேமரா பார் ஆக மாற்றப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் அதன் புத்தம் புதிய மாடல் ஆன ஐபோன் ஏரிலும் கூட இதேபோன்ற வடிவமைப்பை தான் பயன்படுத்தியுள்ளது. ஐபோன் ஏர் மாடலில் சிங்கிள் ரியர் கேமரா இருந்தாலும் கூட, இது ஒரு நீளமான ஓவல் வடிவ கேமரா பாரில் வைக்கப்பட்டுள்ளது. ஐபோன் யூசர்களுக்கு வேண்டுமானால் இது ஒரு குறிப்பிடத்தக்க புதிய வடிவமைப்பாக இருக்கலாம். ஆனால் ஆண்ட்ராய்டு வாசிகளுக்கு இது "ஏற்கனவே பார்த்த ஒன்று தான்".
ஐபோன் 17 சீரீஸில் இடம்பெற்றுள்ள நீளமான கேமரா பார் ஆனது பிக்சல் 6 சீரிஸில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு கேமரா டிசைன் ஆகும். இது கூகுளின் சிக்னேச்சர் டிசைன் ஆகவே மாறிவிட்டது; பிக்சல் 10 சீரீஸே அறிமுகமாகி விட்டது.. இப்போது தான் ஆப்பிள் அதை காப்பி அடித்துள்ளது. பின் குறிப்பு: இதுவரை வேறு எந்த பெரிய ஸ்மார்ட்போன் பிராண்டும் பிக்சலின் கேமரா பாரை காப்பி அடித்ததில்லை!

2. ஐபோன் 17 ப்ரோவின் 48எம்பி டெலிஃபோட்டோ கேமரா: ஐபோன் 17 சீரிஸில் புதிய கேமரா பார் வடிவமைப்பை தவிர, ஐபோன் 17 ப்ரோ மாடலில் மேம்படுத்தப்பட்ட டெலிஃபோட்டோ கேமராவும் கவனிக்கத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 ப்ரோவில் 12எம்பி டெலிஃபோட்டோ கேமரா இடம்பெற்றது. அதன் இடத்தில் இப்போது ஐபோன் 17 ப்ரோவில் புதிய 48எம்பி டெலிஃபோட்டோ சென்சார் உள்ளது.
இதுவும் கூட கூகுள் பிக்சல் 10 ப்ரோவில் உள்ள டெலிஃபோட்டோ கேமரா செட்டப்பை போலவே உள்ளது. பிக்சல் 10 ப்ரோவிலும் கூட 48எம்பி டெலிஃபோட்டோ கேமரா தான் உள்ளது. மேலும் இதன் ஜூம் வரம்புகள் 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 10எக்ஸ் "ஆப்டிகல் இமேஜ் குவாலிட்டி" உடன் ஐபோன் 17 ப்ரோ மாடலை விட சற்று சிறப்பாக உள்ளன. ஐபோன் 17 ப்ரோவில் அதிகபட்சம் 8எக்ஸ் கிடைக்கிறது.

3. நான்-பிளாக்ஷிப் மாடலில் 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே: ஐபோன் 17 சீரிஸின் பேஸிக் வேரியண்ட் ஆன ஐபோன் 17 மாடலையும், பழைய ஐபோன் 16 மாடலையும் மேலோட்டமாக ஒப்பிட்டு பார்த்தால் - பெரிய அப்கிரேட் எதுவும் இல்லாதது போலவே தெரியும். ஆனால் உண்மை என்னவென்றால் ஐபோன் 17 ஒரு நல்ல அப்கிரேட்-ஐ பெற்றுள்ளது.
அது 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவாகும். கடந்த 2021 இல் ஐபோன் 13 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஆப்பிள் நிறுவனம் அதன் ப்ரோ மாடல்களில் 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவை பேக் செய்து வருகிறது. மேலும் ஆண்டுதோறும், நான்-ப்ரோ மாடல்கள் 60ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவுடன் வெளியாகின. ஆனால் அது ஐபோன் 17 உடன் முடிவுக்கு வந்துள்ளது; ஐபோன் 17 மாடலில் 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது.
இது ஐபோன் பிரியர்களுக்கு வேண்டுமானால் "வாவ்" சொல்ல வைக்கும் அப்டேட் ஆக இருக்கலாம். ஆனால் ஆண்ட்ராய்டு வாசிகளுக்கு இதெல்லாம் ஒரு அப்டேட்டே கிடையாது. ஏனென்றால் கடந்த பல ஆண்டுகளாக, பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளேக்கள் இடம்பெறுகின்றன. கூகுளின் பேஸிக் பிக்சல் 8, சாம்சங்கின் பேஸிக் கேலக்ஸி எஸ் மாடல்கள் என அனைத்துமே 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவுடன் வருகின்றன.
4. சாம்சங் போன்களை போலவே, ஆன்ட்டி ரெஃப்ளெக்ட்டிவ் ஸ்க்ரீன்கள்: முழு ஐபோன் 17 சீரிஸ் மாடல்களுமே புதிய "பிரதிபலிப்பு எதிர்ப்பு பூச்சு" (Anti-reflective coating) உடனான ஸ்க்ரீன்களை கொண்டுள்ளன. கடுமையான ஒளி நிலைமைகளின் கீழ் திரைகளை காணவு உதவும் இந்த கோட்டிங் - ஒரு ஈர்க்கக்கூடிய அம்சமாக இருந்தாலும் கூட "மறுபடியும்" இது பழசு தான். சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவிலிருந்து இது காப்பி அடிக்கப்பட்டுள்ளது.

5. ஐபோன் ஏர் மாடல்: மேலே கண்ட 4 அம்சங்களும் தான் காப்பி. ஆனால் "ஐபோன் ஏர்" மாடல் ஆனது ஒரு முழு ஸ்மார்ட்போனாகவே காப்பி தான். ஐபோன் ஏர் - ஆப்பிளின் முதல் அல்ட்ரா-ஸ்லிம் ஐபோன் மாடல் ஆன இது அளவீட்டில் வெறும் 5.6 மிமீ தடிமனை மட்டுமே கொண்டுள்ளது; எடையில் இது வெறும் 165 கிராம் மட்டும் உள்ளது.
ஆனால் இது போன்ற "மிகவும் ஸ்லிம் ஆன ஸ்மார்ட்போனை" நாம் பார்ப்பது இது முதல் முறை அல்ல. சாம்சங் நிறுவன கடந்த மே மாதத்திலேயே அதன் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் மாடலை அறிமுகம் செய்துவிட்டது. இது அளவீட்டில் 5.8 மிமீ உள்ளது. கேலக்ஸி எஸ்25 எட்ஜ் மற்றும் ஐபோன் ஏர் ஆகிய இரண்டுமே பிளாக்ஷிப் சிப்செட்கள் மற்றும் தரமான டிஸ்பிளேக்களை கொண்டுள்ளன. இருப்பினும் ஐபோன் ஏர் மாடலில் உள்ள சிங்கிள் 48எம்பி கேமராவுடன் ஒப்பிடும்போது, 200எம்பி ப்ரைமரி + 12எம்பி அல்ட்ரா வைட் டூயல் கேமரா செட்டப் உடன் வரும் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் மாடல் ஒரு "கிளியர் வின்னர்" ஆகும்!


Click it and Unblock the Notifications








