செல்போன் தண்ணீல விழுந்தா இப்படி பண்ணுவாங்களாம்!!

By Jeevan
|

நம்மில் அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறோம். ஆனால் பாதுகாப்பாக வைத்திருக்கிறோமா என்றால், இல்லவே இல்லை! திருட்டுப்போவதெல்லாம் வேறுவிஷயம்.

சில நேரங்களில் நாமே நமது செல்போனை நீரில் போட்டுவிடுகிறோம். அதாவது தவறி விழுகிறது என்று பொருள்கொள்ளவும்! அல்லது கீழே போட்டு உடைக்கிறோம், இதையும் அவ்வாறே பொருள்கொள்ளவும்!

என்னவாகும்? காசுக்கு வந்த தண்டம்தான். தேவையில்லாமல் ஆயிரக்கணக்கில் பணம் வீணாகும். இதை எளிதில் சமாளிப்பது எப்படி என்பதை இங்கே விளக்கியுள்ளோம்.

[தயவுசெய்து இவற்றை பின்பற்றவேண்டாம். சிக்கல்கள் நேர்ந்தால் நிர்வாகம் பொறுப்பேற்காது மக்களே!]

செல்போன் தண்ணீல விழுந்தா?

செல்போன் தண்ணீல விழுந்தா?

நீரில் விழுந்த ப்ளாக்பெர்ரி போனை எப்படி எளிதில் சரிசெய்யலாம்?

நண்பர் இப்படிச்செய்தார்,
அந்த ப்ளாக்பெர்ரி போனின் பேட்டரியை நீக்கிவிட்டு, தனது மைக்ரோ ஓவனில் 20 நிமிடங்கள் சூடுபடுத்தியுள்ளார். பிரச்சனை தீர்ந்துள்ளது. மேலும் சூடு செய்கையில் அதன் வெப்பநிலை 200 டிகிரி பேரன்ஹீட் அல்லது அதற்கும் குறைவாக இருக்கவேண்டும் என்கிறார் அந்த அறிவாளி!

செல்போன் தண்ணீல விழுந்தா?

செல்போன் தண்ணீல விழுந்தா?

இதிலும் அதே பிராப்ளம்தான். நண்பரின் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் நீரில் தவறிவிழுந்துவிட்டது. பின்னர் அவர் அந்த ஆன்ட்ராய்டு போனை எடுத்து ரப்பிங் ஆல்கஹால் என்ற 'சரக்கில்' முழுவதுமாக நனைத்துவைத்துவிட்டு, 24 மணிநேரம் உலரவைத்துள்ளார். பிரச்சனை எளிதில் தீர்ந்துள்ளது.

செல்போன் தண்ணீல விழுந்தா?

செல்போன் தண்ணீல விழுந்தா?

இதேபோல் நண்பர் ஒருவரின் புது போனானது கீழே விழுந்து திரையில் மட்டும் கீறல்கள் விழுந்துள்ளது. அவர் அதை எப்படி சரிசெய்தார் தெரியுமா?

நாம் பயன்படுத்தும் டூத்பேஸ்ட் தடவியே அதை சரிசெய்துள்ளார். மேலும் அவர்கூறுகையில், இந்த முறையானது CD/DVD ஆகியவற்றிலுள்ள கீறல்களைக் கூட சரிசெய்யும் என்றார்.

செல்போன் தண்ணீல விழுந்தா?

செல்போன் தண்ணீல விழுந்தா?

தோழியொருத்தியின் மொபைல் போன் கீழே விழுந்து சிறிய அளவில் கீறல்கள் உண்டயுள்ளது. அதை அவர் சரிசெய்த வித்தத்தை நினைத்தாலே நமக்கு சிரிப்புதான் வருகிறது.

அதாவது வெஜிடபிள் ஆயில் பயன்படுத்தி அந்த கீறல்களை சரிசெய்தாராம்!

செல்போன் தண்ணீல விழுந்தா?

செல்போன் தண்ணீல விழுந்தா?

உங்களிடம் செயலிழந்த மொபைல் பேட்டரி இருந்தால் இதை முயற்ச்சித்துப்பாருங்கள். அதாவது செயலிழந்த பேட்டரியின் மேல் ஐஸ்கட்டிகளை பரப்பி ஒருநாள் முழுவதும் விட்டுவிடுங்கள். அடுத்தநாள் அந்த பேட்டரி வேலைசெய்ய ஆரம்பித்துவிடும்.

Gadgets Gallery

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X