ஸ்மார்ட்போன் தானாக ரீபூட் ஆகின்றதா? இந்த 5 வழிகளை பின்பற்றுங்கள்.!

ஆண்ட்ராய்டு போன் தானாக ரீபூட் ஆனால் கீழே குறிப்பிட்டுள்ள சில வழிமுறைகளை கடைபிடித்தால் போதுமானது.

|

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவர்களுடைய போன் தன்னால் ரீபூட் ஆகும் அனுபவத்தை பெற்றிருக்க வாய்ப்பு உண்டு. அந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய முடியாமல் வெறுமனே பார்த்து கொண்டிருக்கும் நிலை தான் ஏற்படும். இதுபோன்ற குறைபாடுடைய ஸ்மார்ட்போன் எவை என்பதை குறித்த விவரங்கள் தெரிந்து வைத்து கொள்வது அவசியம். இந்த பிரச்சனை ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், இது ஒரு பெரிய விஷயமாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட்போன் தானாக ரீபூட் ஆகின்றதா? இந்த 5 வழிகளை பின்பற்றுங்கள்.!

இந்த மாதிரி பிரச்சனை ஏற்படும்போது பெரும்பாலானோர் செய்வது என்னவெனில் தங்கள் போனில் உள்ள ஆர்.ஓ.எம்-ஐ இன்ஸ்டால் செய்வதாகத்தான் உள்ளது. ஆனால் இது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அல்ல. மேலும் அது எளிதானதும் அல்ல. அதற்கு பதிலாக உங்கள் ஆண்ட்ராய்டு போனில் கீழே குறிப்பிட்டுள்ள சில வழிமுறைகளை கடைபிடித்தால் போதுமானது.

ஆப்ஸ் மற்றும் விட்ஜெட்ஸ்:

ஆப்ஸ் மற்றும் விட்ஜெட்ஸ்:

தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் எண்ணிலடங்கா ஆப்ஸ்கள் உள்ளன. நாம் ஒருசில ஆர்வத்தில் பல ஆப்ஸ்களை நம்முடைய ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துவிடுகிறோம். அவ்வாறு அந்த செயலி இன்ஸ்டால் ஆகும்போது அதனுடைய டேட்டா மற்றும் ஃபைல்களும் சேர்ந்து இன்ஸ்டால் ஆகிறது. இதனால் போனில் உள்ள சிபியூ பவரின் அளவு குறைகிறது. நீங்கள் குறைந்தது 60 நாட்கள் ஒரு செயலியை பயன்படுத்தவில்லை என்றால் உடனே அதை அன் -இன்ஸ்டால் செய்துவிடுங்கள். ஒருவேளை அதே ஆப்ஸ் திரும்ப தேவைப்பட்டால் மீண்டும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இதனை செய்து வந்தால் உங்கள் போனில் போதுமான இடங்கள் இருப்பது மட்டுமின்றி தேவையில்லாமல் ரீபூட் ஆகும் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

ஆப்ஸ்களை சுத்தம் செய்யும்போது கவனம் தேவை:

ஆப்ஸ்களை சுத்தம் செய்யும்போது கவனம் தேவை:

சில சமயம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தேவையில்லாத ஆப்ஸ்களை சுத்தம் செய்யும்போது ஒருசில முக்கிய பைல்களை இழக்கும் அபாயமும் ஏற்படுவதுண்டு. இந்த வகையான பிரச்சனைக்குரிய ஆப்ஸ்களை நீக்கும்போது கவனம் தேவை. அதேபோல் எந்த செயலிகளையும் டிஸேபிள் செய்ய வேண்டும். ஒன்று அந்த செயலியை வைத்திருங்கள் அல்லது அன் இன்ஸ்டால் செய்துவிடுங்கள். அதே நேரத்தில் ஒரு செயலி சரியாக எனேபிள் செய்யப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிப்பதும் அவசியம். மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் நமக்கு தேவையான செயலியை கண்டுபிடிக்க சிஸ்டத்தில் உள்ள தகவலை பயன்படுத்தலாம்

பேட்டரியை சோதனை செய்து கொள்ளுங்கள்

பேட்டரியை சோதனை செய்து கொள்ளுங்கள்

தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பேட்டரியை வெளியே எடுக்க முடியாத வகையில் வெளிவருகின்றது. ஒருவேளை பேட்டரி வெளியே எடுக்கும் வகையில் உள்ள ஸ்மார்ட்போனை நீங்கள் வைத்திருந்தால், அந்த பேட்டரியை டைட்டாக இருக்கின்றதா? என்பதை சோந்தனை செய்து கொள்ளுங்கள். இதனை சோதனை செய்வதன் மூலம் ஸ்மார்ட்போன் சரியாக வேலை செய்வதை அறிந்து கொள்ளலாம்.

உங்கள் ஸ்மார்ட்போன் அதிகம் சூடாக உள்ளதா?

உங்கள் ஸ்மார்ட்போன் அதிகம் சூடாக உள்ளதா?

நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட்போனை அதிகளவு ஜிபிஎஸ், வைபை மற்றும் பிரைட்னஸ் உபயோகப்படுத்தினால் போன் அதிகளவில் சூடாக வாய்ப்பு உண்டு. ஒருசில மாடல் ஸ்மார்ட்போன்களில் போன் அதிகளவு சூடாகிவிட்டால் ரீபூட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் கேம்ஸ் அதிக நேரம் விளையாடினாலும் போன் சூடாகி ரீபூட் ஆகும். உங்கள் போன் அதிகளவு சூடாகி வருவதை நீங்கள் கண்டுபிடித்தால் போனுக்கும் உங்களுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்

பவர் பட்டன் ஸ்டக் ஆகின்றதா?

பவர் பட்டன் ஸ்டக் ஆகின்றதா?

உங்கள் ஸ்மார்ட்போனின் பவர் பட்டன் ஒருவேளை உங்களுக்கே தெரியாமல் சிலசமயம் ஸ்டக் ஆகிவிடும். அந்த சமயத்திலும் ஸ்மார்ட்போன் ரீபூட் ஆகிவிட வாய்ப்பு உள்ளது. இதற்கு ஸ்மார்ட்போனின் பவர்பட்டன் கீழே தண்ணீர் அல்லது அழுக்கு இருப்பதே காரணமாக இருக்கலாம். வேர்வை உள்பட சில காரணங்களால் இந்த பிரச்சனை வரலாம். எனவே அவ்வப்போது பவர் பட்டனை கவனித்து கொள்வது நல்லது.

மேற்கண்ட அனைத்து வழிகளை பின்பற்றியும் தானாக ரீபூட் ஆவது தொடர்ந்தால் அருகில் உள்ள ஒரு நல்ல சர்வீஸ் செண்டரை அணுகவும்

Best Mobiles in India

English summary
5 common causes and fixes to stop your Android phone from rebooting : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X