Jio, Airtel-ன் 5G சேவை அனுபவிக்கனுமா? அப்போ இந்த 5 பட்ஜெட்-விலை 5G Phone-ல ஒன்னு வாங்குங்க!
கடந்த 2 ஆண்டுகளாகவே 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை அமோகமாக உள்ளது. அதற்கு 2 முக்கியமான காரணங்கள் உள்ளன. ஒன்று - பட்ஜெட் விலைக்கு 5ஜி போன்கள் அறிமுகமாக தொடங்கின; இரண்டாவது - ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபர்கள்!
இந்தியாவின் இரண்டு முக்கிய டெலிகாம் நிறுவனங்களான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களுடன் இலவசமாக வரம்பற்ற 5ஜி நெட்வொர்க்கிற்கான அணுகல்களை வழங்குகின்றன. இந்த ஒரு காரணத்திற்காகவே பலரும் 4ஜி போனில் இருந்து 5ஜி ஸ்மார்ட்போனிற்கு அப்கிரேட் ஆகினர்.

அதிலும் குறிப்பாக ரூ.10,000 - ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் சில தரமான 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக தொடங்கிய பின்னர், இந்திய சந்தையில் 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை தாறுமாறாக எகிற தொடங்கியது. ஒருவேளை நீங்களும் ஜியோ மற்றும் ஏர்டெல்லின் இலவச 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) அனுபவிக்க.. பட்ஜெட் விலையில் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்ஃபோனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால்.. கீழ்வரும் 5 மாடல்களுமே உங்களுக்கானது தான்!
1. ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9x 5G): இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலை வரம்பில் வாங்க கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும்.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 44W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான மிகப்பெரிய 6,000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் டிஸ்பிளே போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.
2. போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G): இது மிகவும் மலிவு விலையில் வாங்க கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். தற்போது இது ரூ.9,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பட்ஜெட்-விலை மாடலாக இருந்தாலும் கூட, இது 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 SoC) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது மற்றும் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கூடுதலாக, இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது.
3. லாவா ஸ்ட்ராம் 5ஜி (Lava Storm 5G): 5ஜி சப்போர்ட் உடன் சேர்த்து மல்டி டாஸ்கிங்கை செய்வதில் இது ஒரு பெஸ்ட் ஸ்மார்ட்போனாகும். வெறும் ரூ.11,999 க்கு இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது.
மேலும் லாவா ஸ்ட்ராம் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட்டையும் கொண்டுள்ளது. எல்லாவற்றை விட முக்கியமான இந்த விலை வரம்பில் பிளாஸ்டிக் பேக் பேனலை (Plastic Back Panel) வழங்கும் பெரும்பாலான போன்களை போலல்லாமல், இது கிளாஸ் பேக் பேனலுடன் (Glass Back Panel) வருகிறது.
4. நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G): ரூ.10,000 க்குள் வாங்க கிடைக்கும் மற்றொரு பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் இதுவாகும். ரூ.9,999 க்கு இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட், 4 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், ட்ரிபிள் ரியர் கேமரா, ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஓஎஸ் மற்றும் 5000mAh பேட்டரி ஆகியவற்றை வழங்குகிறது.
5. சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி (Samsung Galaxy M14 5G): இது தான் தற்போது சாம்சங்கின் மிகவும் மலிவு-விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இன்-ஹவுஸ் எக்ஸிநோஸ் 1330 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ், 6000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,490 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








