Home
Mobile

1 இல்ல மொத்தம் 5.. 2024 முடிவதற்குள்.. இந்தியாவில் அறிமுகமாகி பட்டையை கிளப்ப போகும் 5 புது போன்கள்!

2024 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, இனிமேல் இந்தாண்டு எந்த விதமான முக்கிய ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகாது. இனிமேல் 2025 ஆம் ஆண்டில் தான் வெயிட்டான ஸ்மார்ட்போன்கள் எல்லாம் வரும் என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால், அது முற்றிலும் தவறு!

2024 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் 2 மாதங்களுக்கும் குறைவாகவே உள்ளது என்றாலும் கூட, இந்திய சந்தையில் 5 முக்கியமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதென்ன ஸ்மார்ட்போன்கள் எந்தெந்த மாடல்கள் எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:

2024-க்குள் அறிமுகமாகி பட்டையை கிளப்ப போகும் 5 புது போன்கள்!

01. ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro): இது நவம்பர் 26 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஃபிளாக்ஷிப் சிப்செட்டுடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். மேலும் இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000+mAh பேட்டரி, டிசி டிம்மிங்குடன் சாம்சங் குவாட் மைக்ரோ-கர்வ்டு டிஸ்பிளே போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கும்.

இதுதவிர்த்து 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, ஐபி69 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ், இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் ரீடர் மற்றும் தோராயமாக 9 மிமீ அளவிலான ஸ்லிம் பாடி ஆகியவைகளையும் கொண்டிருக்கும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்தியாவில் ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.55,000 - ரூ.60,000 க்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

02. ஐக்யூ 13 (iQOO 13): இது டிசம்பர் 3 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது 2கே AMOLED டிஸ்பிளே, 16ஜிபி ரேம், 1டிபி ஸ்டோரேஜ், ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 120W பாஸ்ட் சார்ஜிங் போன்ற முக்கிய அம்சங்களுடன் அறிமுகமாகும். சீனாவில் இது ரூ.47,000 முதல் என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தன் வெளியீட்டு விலை தீவிரமாக இருக்கலாம்.

03. ஒப்போ பைண்ட் எக்ஸ்8 சீரீஸ் (Oppo Find X8 Series): இது நவம்பர் 21 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்கீழ் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 மற்றும் பைண்ட் எக்ஸ்8 ப்ரோ அறிமுகமாகும். இந்த சீரிஸ் ஹசல்பிளாட் கேமரா செட்டப் உடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. விலையை பொறுத்தவரை எக்ஸ்8 மாடல் ரூ,49,990 க்கும், எக்ஸ்8 ப்ரோ மாடல் ரூ.62,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

04.விவோ எக்ஸ்200 சீரீஸ் (Vivo X200 Series): இது நவம்பர் 22 ஆம் தேதியன்று உலகளவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சீரிஸின் கீழ் விவோ எக்ஸ்200 மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ மாடல்கள் மட்டுமே உலகளவில் அறிமுகமாகும் என்றும், விவோ எக்ஸ்200 ப்ரோ மினி மாடல் ஆனது சீனாவிற்கு பிரத்யேகமானதாக இருக்குமென்றும் கூறப்படுகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இந்த சீரீஸின் வழியாக, விவோ நிறுவனம் புதிய செய்ஸ் ஆப்டிக்ஸ் (Zeiss Optics) ஷூட்டர்களையும், ஒரு பிளாட் ஆன டிஸ்பிளேவையும் சந்தைக்கு கொண்டு வருகிறது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 9400 உடன் இந்தியாவிற்கு வரும் முதல் ஸ்மார்ட்போனாகவும் இருக்கலாம். விலையை பொறுத்தவரை, எக்ஸ்200 ரூ.50,990 க்கும், எக்ஸ்200 ப்ரோ ரூ.62,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

05. ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G): இது நவம்பர் 20 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது இந்தியாவில் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாக உள்ள 5ஜி ஸ்மார்ட்பொன்னாகும். இது ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளே, 8 ஜிபி ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும்.

Best Mobiles in India

English summary
5 Biggest New Smartphones Are Going To Launch in India Before End of 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X