சைலன்ட் ஆக ரூ.5000 வரை தள்ளுபடி! எல்லா கண்களும் இந்த 5 போன்கள் மீது தான்!

|

இதை செப்டம்பர் மாதம் என்று சொல்லாமல், புது ஸ்மார்ட்போன்களை வாங்கும் மாதம் என்றே கூறலாம்!

ஏனெனில் இந்தியாவின் 2 மிகப்பெரிய இ-காமர்ஸ் வலைத்தளங்களான அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய இரண்டுமே.. தத்தம் சிறப்பு விற்பனைகளை இம்மாதம் (செப்.23 முதல்) நடத்த உள்ளன!

சரியாக பிளான் செய்தால்.. தரமாக பணத்தை மிச்சப்படுத்தலாம்!

சரியாக பிளான் செய்தால்.. தரமாக பணத்தை மிச்சப்படுத்தலாம்!

நீங்கள் சற்றே புத்திசாலித்தனமாக செயல்பட்டால் மற்றவர்களை விட அதிக பணத்தை மிச்சப்படுத்தலாம்.

அதாவது சிறப்பு விற்பனைகள் தொடங்கும் முன்பே, (பெரும்பாலும்) என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்கிற விவரம் - அந்தந்த வலைதளங்களில் - பட்டியலிடப்பட்டு இருக்கும்.

திடீர்னு 57% ஆபர்! இந்த 4 Samsung போன்களுக்கும்.. இனி செம்ம டிமாண்ட்!திடீர்னு 57% ஆபர்! இந்த 4 Samsung போன்களுக்கும்.. இனி செம்ம டிமாண்ட்!

'அவுட் ஆஃப் ஸ்டாக்'கில் சிக்கி கொள்ள வேண்டாம்!

'அவுட் ஆஃப் ஸ்டாக்'கில் சிக்கி கொள்ள வேண்டாம்!

பொதுவாகவே, ஒரு சிறப்பு விற்பனை தொடங்கி 2, 3 நாட்கள் கழித்து சென்றால், பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் "அவுட் ஆஃ ப் ஸ்டாக்" ஆகிவிடும்.

அதனால் தான் நம்மில் பலரும்,ஒரு சிறப்பு விற்பனை தொடங்கிய வேகத்திலேயே.. டக் டக்கென்று ஆர்டர்களை போட்டு விடுவார்கள்!

அந்த டெக்னீக்கை நீங்களும் ஃபாலோ செய்ய விரும்பினால்?

அந்த டெக்னீக்கை நீங்களும் ஃபாலோ செய்ய விரும்பினால்?

எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன தள்ளுபடிகள் கிடைக்கிறது என்பதை முன்னரே அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அப்படியாக, செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கவுள்ள அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் 2022 விற்பனையின் (Amazon Great Indian Festival 2022 Sale) போது நீங்கள் தவறவிடக்கூடாத 5 ஸ்மார்ட்போன் ஆபர்களின் பட்டியல் இதோ!

ரூ.240-க்கு இப்படி ஒரு லாபகரமான Jio திட்டம் இருக்குனு பலருக்கும் தெரியாது!ரூ.240-க்கு இப்படி ஒரு லாபகரமான Jio திட்டம் இருக்குனு பலருக்கும் தெரியாது!

01. ஒன்பிளஸ் 10டி 5ஜி (OnePlus 10T 5G)

01. ஒன்பிளஸ் 10டி 5ஜி (OnePlus 10T 5G)

ரூ.49,999 என்கிற ஆரம்ப விலையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5 ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 10டி மாடல் ஆனது அமேசான் விற்பனையின் போது ரூ.44,999 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கும்.

இது ஜேட் கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் என்கிற கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும்!

02. ரியல்மி நார்சோ 50ஏ (Realme Narzo 50A)

02. ரியல்மி நார்சோ 50ஏ (Realme Narzo 50A)

நினைவூட்டும் வண்ணம் ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆன நார்சோ 50ஏ ஆனது ரூ.11,499 என்கிற ஆரம்ப விலையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் அமேசான் 2022 கிரேட் இந்தியன் பெஸ்டிவலின் போது ரூ.8,499 என்கிற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படும்.

உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?

03. டெக்னோ பாப் 5 எல்டிஇ (Tecno Pop 5 LTE)

03. டெக்னோ பாப் 5 எல்டிஇ (Tecno Pop 5 LTE)

டெக்னோ நிறுவனத்தின் சூப்பர்-பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன டெக்னோ பாப் 5 எல்டிஇ ஆனது, முன்னதாக ரூ.6,299 க்கு வாங்க கிடைத்தது.

ஆனால் அமேசான் விற்பனையின் போது ரூ.6,099 க்கு வாங்க கிடைக்கும். இது Deepsea Lustre, Ice Blue மற்றும் Turquise Cyan என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும்!

04. ஒப்போ ஏ54 (Oppo A54)

04. ஒப்போ ஏ54 (Oppo A54)

ஒப்போவின் பிரபலமான பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஒப்போ ஏ54 ஆனது, அமேசான் விற்பனையின் போது ரூ.9,391 க்கு வாங்க கிடைக்கும்.

நினைவூட்டும் வண்ணம், இது ரூ.13,490 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஸ்டாரி ப்ளூ, சிஸ்டல் பிளாக், கோல்ட் போன்ற கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும்.

ரூ.8,999-க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்? கண்ணை மூடிக்கிட்டு வாங்கலாம்!ரூ.8,999-க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்? கண்ணை மூடிக்கிட்டு வாங்கலாம்!

05. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி (Samsung Galaxy M33 5G)

05. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி (Samsung Galaxy M33 5G)

இந்த பட்டியலில் கடைசியாக உள்ளது, சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இது ரூ.15,499 என்கிற ஆரம்ப விலையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் வரவிருக்கும் அமேசான் விற்பனையின் போது இது ரூ.11,999 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
5 Best Offers On Smartphone in Upcoming Amazon Great Indian Sale 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X