இந்த ஜூன் 2025 இல்.. கண்ண மூடிக்கிட்டு வாங்க கூடிய டாப் 5 பெஸ்ட் Camera Phone-கள்!
200 எம்பி கேமரா இருந்தால் மட்டுமே.. அல்லது ஐஓஎஸ் ஆதரவு இருந்தால் மட்டுமே.. அல்லது ஏஐ கேமரா என்கிற வார்த்தைகள் இருந்தால் மட்டுமே ஒரு ஸ்மார்ட்போன் ஆனது பெஸ்ட் ஸ்மார்ட்போன் ஃபார் மொபைல் போட்டோகிராஃபி என்கிற பட்டியலில் சேர்ந்துவிடாது.
குறிப்பாக இந்த 2025 ஆம் ஆண்டில் இதுவரை வெளியான பெஸ்ட் கேமரா போன்கள் - வெறும் மெகாபிக்சல்களை மட்டும் பயன்படுத்தவில்லை. அவைகள் பெரிஸ்கோப் லென்ஸ்கள், பெரிய சென்சார்கள், பிரத்யேக இமேஜிங் சிப்கள் மற்றும் தொழில்முறை ஆக்சஸெரீஸ்கள் உடன் வருகின்றன. அப்படிப்பட்ட டாப் 5 கேமரா போன்களின் (Camera Phone) பட்டியல் இதோ:

1. ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ / ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro / Pro Max): இந்த இரண்டு மாடல்களுமே 5எக்ஸ் 120மிமீ டெலிஃபோட்டோவை பேக் செய்கின்றன. மேலும் இவைகளின் ட்ரிபிள்-கேமரா செட்டப் ஆனது இரண்டாம் தலைமுறை குவாட்-பிக்சல் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 48எம்பி ஃப்யூஷன் ப்ரைமரி சென்சாரை சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அல்ட்ரா-வைட் கேமராவானது மேக்ரோ ஆதரவுடன் 48எம்பி சென்சாராக மேம்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், உண்மையான மேஜிக் மென்பொருளில் தான் உள்ளது: இவ்விரு மாடல்களுமே 4கே@120 ஸ்லோ-மோ, ஸ்பேஷியல் ஆடியோ கேப்சர் மற்றும் மெஷின் லேர்னிங் உதவியுடன் "ஸ்டுடியோ மிக்ஸ்" ஆடியோ ஆகியவற்றுக்கான ஆதரவை வழங்குகிறது!
2. ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra): 1-இன்ச் டைப் 50எம்பி Leica ப்ரைமரி சென்சார், அல்ட்ரா-வைட், 3எக்ஸ் ப்ளோட்டிங் டெலிஃபோட்டோ மற்றும் 200MP பெரிஸ்கோப் ஜூம் ஆகியவற்றுடன் புகைப்படம் எடுப்பதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ள ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இதுவாகும்.
இது அதன் 100mm டெலிஃபோட்டோவிலிருந்து 4K@120, அனைத்து லென்ஸ்களிலும் 10-பிட் லாக் ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது. மேலும் ப்ரோ-லெவல் கலர் துல்லியத்திற்காக ACES சான்றிதழை பெற்ற முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனும் போன் இதுவாகும். இதெல்லாம் போதாது என்றால், ஷாவ்மீ ஒரு பிஸிக்கல் ஷட்டர் கிரிப், பில்டர்ஸ் மவுண்ட்கள் மற்றும் கூடுதல் 2000mAh பேட்டரியுடன் கூடிய போட்டோகிராஃபி கிட்ஐயும் இந்த் மாடலுடன் விற்பனை செய்கிறது.

3. சாம்சங் கேலக்ஸி எஸ்15 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra): இந்த ஸ்மார்ட்போனின் ஹைலைட் 200MP ப்ரைமரி கேமராவாகும். இது 50MP அல்ட்ரா-வைட், 3எக்ஸ் டெலிஃபோட்டோ மற்றும் 5எக்ஸ் ஆப்டிகல் மற்றும் 100எக்ஸ் ஸ்பேஸ் ஜூம் திறன் கொண்ட இரண்டாவது 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோவையும் கொண்டுள்ளது
சாம்சங்கின் இமேஜ் ப்ராசஸிங் இன்னும் நிறைவுற்ற வண்ணங்களை நோக்கி சென்றாலும், அதன் சமீபத்திய ISP மேம்பாடுகள் டைனமிக் ரேன்ஜ் மற்றும் குறைந்த-ஒளி செயல்திறனில் உள்ள இடைவெளியை இன்னும் குறைத்துள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8K@30 மற்றும் 4K@60 ரெக்கார்டிங்களையும் செய்கிறது. சாம்சங் நிறுவனத்திடம் இதைவிட பெரிய தரமான கேமரா ஸ்மார்ட்போன், அடுத்த அல்ட்ரா மாடலாகத்தான் இருக்கும்!

4. கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 9 Pro XL): பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் கேமரா விவரக்குறிப்புகள் "வன்பொருள்" அடிப்படையில் அசுரத்தனமாக இல்லை என்றாலும், இது உருவாக்கும் புகைப்படங்கள் முற்றிலும் அட்டகாசமானவைகளாக இருகின்றன. இது 50MP GNK சென்சார், 48MP அல்ட்ரா-வைட் மற்றும் 5எக்ஸ் 48MP டெலிஃபோட்டோவை இணைத்து சமநிலையான, விரிவான மற்றும் ஹை-டைனமிக்-ரேஞ்ச் படங்களை உருவாக்குகிறது.
இதன் கேமரா டிபார்ட்மென்ட் ஆனது ஸ்மார்ட் அம்சங்களால் நிரம்பியுள்ளது: பெஸ்ட் டேக் தானாகவே க்ரூப் ஷாட்களை மிக்ஸ் செய்கிறது, மேஜிக் எடிட்டர் ஷாட்டிற்கு பிறகு பொருட்களை நகர்த்த உங்களை அனுமதிக்கிறது, மேலும் ரியல் டோன் பல்வேறு ஸ்கின் டோன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் மிகவும் துல்லியமாக செயல்படுகிறது. மேலும் அனைத்து லென்ஸ்களிலும் 4K@60 வீடியோவையும் ரெகார்ட் செய்ய முடிகிறது.

5. ஒப்போ பைண்ட் எக்ஸ்8 ப்ரோ (Oppo Find X8 Pro): பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன் பிரிவில் இது கவனிக்கப்படாமல் இருந்தாலும்.. உண்மையிலேயே இது பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு மாடல் ஆக உள்ளது. இது மூன்று 50MP அமைப்பில் LYT-808 ப்ரைமரி சென்சார், ஹை-ரெஸ் அல்ட்ரா-வைட் மற்றும் டூயல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோக்கள், 6எக்ஸ் ஜூம் என கிட்டத்தட்ட எல்லாமே உள்ளன
மேலும் இதன் கேமரா செட்டப் Hasselblad உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது, எனவே போர்ட்ரெய்ட் ரெண்டரிங் மற்றும் கலர் டியூனிங் ஆகியவை "தி பெஸ்ட்" ஆக உள்ளன. இது 120x டிஜிட்டல் ஜூமிங் வரை ஆதரிக்கிறது - இது ஒரு ஸ்மார்ட்போனில் நீங்கள் காணக்கூடிய சிறந்த ஜூமிங் ஆகும்.


Click it and Unblock the Notifications








