பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை: நீங்கள் தவற விடக் கூடாத 5 ஸ்மார்ட்போன்கள்.!

|

மக்கள் மிகவும் எதிர்பார்த்த பிளிப்காரட் பிக் பில்லியன் டேஸ் எனும் சிறப்பு விற்பனை வரும் அக்டோபர் 16-ம் முதல் துவங்குகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு அசத்தலான ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டேப்லெட், டிவி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கும் சிறப்புத் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை

குறிப்பாக இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் டாப் 5 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விலைகுறைக்கப்பட்ட அந்த டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் மற்றும் முழு விவரங்களையும் பார்ப்போம்.

போக்கோ எம்2 ப்ரோ

போக்கோ எம்2 ப்ரோ

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எம்2 ப்ரோ சாதனத்தின் உண்மை விலை ரூ.13,999-ஆக உள்ளது, ஆனால் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.67-இன்ச் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி, ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 சிப்செட், 48எம்பி ரியர் கேமரா, 5020எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விலையுயர்ந்த போன்கள் அட்டகாச தள்ளுபடியில்: பிளிப்கார்ட் பண்டிகை தின விற்பனை!

சாம்சங் கேலக்ஸி எஃப்41

சாம்சங் கேலக்ஸி எஃப்41

சாம்சங் நிறுவனத்தின் அசத்தலான கேலக்ஸி எஃப்41 சாதனத்திற்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேலக்ஸி எஃப்41 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.16,999-ஆக உள்ளது, ஆனால் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.15,499-விலையில் வாங்க முடியும். மேலும் 6.4-இன்ச் டிஸ்பிளே, எக்ஸினோஸ் 9611 சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ், 64எம்பி ரியர் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி, 4கே வீடியோ பதிவு செய்யும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

போக்கோ எக்ஸ்3

போக்கோ எக்ஸ்3

போக்போ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.16,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.67-இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி, ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 சிப்செட் வசதி, 64எம்பி ரியர் கேமரா, 20எம்பி செல்பீ கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ரியல்மி நார்சோ 20

ரியல்மி நார்சோ 20

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.11,499-ஆக உள்ளது, ஆனால் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.10,499-விலையில் வாங்க முடியும். மேலும் 6.5-இன்ச் டிஸ்பிளே, ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட், 48எம்பி ரியர் கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 ஒப்போ எஃப்15

ஒப்போ எஃப்15

ஒப்போ நிறுவனத்தின் அருமையான ஒப்போ எஃப்15 ஸ்மார்ட்போன் மாடலுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒப்போ எஃப்15 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.18,990-க்கு அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் ஒப்போ எஃப்15 ஸ்மார்ட்போனை ரூ.14,990-க்கு வாங்க முடியும். 6.4-இன்ச் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 70 சிப்செட், 48எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, 4000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
5 Best Affordable Smartphones During Flipkart Big Billion Days: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X