ரூ.15,000-க்குள் கிடைக்கும் அட்டகாசமான 5G போன்கள்: இதோ பட்டியல்.!

|

இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பல செல்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.

 5ஜி போன்

அதில் சில நிறுவனங்கள் பட்ஜெட் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் அதாவது இந்தியாவில் ரூ.15,000-க்குள் கிடைக்கும் அட்டகாசமான 5ஜி போன்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

5G சேவையில் அந்தர்பல்டி: டெலிகாம் துறையில் நுழையும் Adani.. ஜியோ, ஏர்டெல் பிளான் என்ன?5G சேவையில் அந்தர்பல்டி: டெலிகாம் துறையில் நுழையும் Adani.. ஜியோ, ஏர்டெல் பிளான் என்ன?

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி

அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி போனை ரூ.11,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது. மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad-ஆ.! இது டேப்லெட்டா இல்ல வேற மாதிரி டிவைஸா?ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad-ஆ.! இது டேப்லெட்டா இல்ல வேற மாதிரி டிவைஸா?

 சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா +2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 5எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

15 நிமிட பயணத்துக்கு 32 லட்சம் ரூபாய் பில்.. ஆடி போன Uber பயணி: அப்படி எங்க போனாரு தெரியுமா?15 நிமிட பயணத்துக்கு 32 லட்சம் ரூபாய் பில்.. ஆடி போன Uber பயணி: அப்படி எங்க போனாரு தெரியுமா?

 ரியல்மி 9ஐ 5ஜி

ரியல்மி 9ஐ 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,499-விலையில் வாங்க முடியும். இந்த போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

மேலும் 8எம்பி செல்பி கேமரா, Mediatek Dimensity 810 5G பிராசஸர், 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன்.

என்ன ஆனாலும் சரி இந்த சலுகையை மிஸ் பண்ண கூடாது.! realme 4G / 5G போன் மீது தள்ளுபடி.!என்ன ஆனாலும் சரி இந்த சலுகையை மிஸ் பண்ண கூடாது.! realme 4G / 5G போன் மீது தள்ளுபடி.!

ரெட்மி நோட் 11 5ஜி

ரெட்மி நோட் 11 5ஜி

அமேசான் தளத்தில் ரெட்மி நோட் 11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக இந்த போன் 50எம்பி எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட்,6.6-இன்ச் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி நோட் 11 5ஜி ஸ்மார்ட்போன்.

Tecno Pova 4 Pro போன்ல எல்லாமே சூப்பர்.! ஆனா ஒரே ஒரு குறை.! இது தெரியாம வாங்க கூடாது.!Tecno Pova 4 Pro போன்ல எல்லாமே சூப்பர்.! ஆனா ஒரே ஒரு குறை.! இது தெரியாம வாங்க கூடாது.!

போக்கோ எம்4 5ஜி

போக்கோ எம்4 5ஜி

அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மறறும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.14,990-விலையில் வாங்க முடியும். இந்த போக்கோ போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போக்கோ போன்.

அதேபோல் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி,பாஸ்ட் சார்ஜிங் வசதி, Mediatek Dimensity 700 சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த போக்கோ எம்4 5ஜி மாடல்.

 ஒப்போ ஏ74 5ஜி

ஒப்போ ஏ74 5ஜி

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ74 5ஜி போனை ரூ.14,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும் 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆக்டோ-கோர் குவால்காம் ஸனாப்டிராகன் 480 5ஜி சிப்செட், 6.49-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
5 Best 5G Phones to Buy in India Under Rs 15,000: Here's the List: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X