Google Pixel 10a க்கு பதிலாக வேறு எந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்?
கூகுள் (Google) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் பிக்சல் 10 சீரீஸின் கீழ் பட்ஜெட் விலை மாடல் ஆக பிக்சல் 10ஏ (Pixel 10a) ஸ்மார்ட்போனை - இந்தியாவிலும், உலகளாவிய சந்தைகளிலும் அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவும் உடனடியாக தொடங்கியுள்ளது.
ஒருவேளை பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் உங்களை ஈர்க்கவில்லை என்றால்.. அல்லது பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் (ரூ.50,000) உங்களுக்கு "சரியானதாக" தெரியவில்லை என்றால்.. கவலைப்பட வேண்டாம்.. பிக்சல் 10ஏ மாடலுக்கு பதிலாக நீங்கள் வாங்க கூடிய 5 ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சந்தையில் உள்ளன.

அதென்ன ஸ்மார்ட்போன்கள்?
1. கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a)
2. ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R)
3. சாம்சங் கேலக்ஸி ஏ56 (Samsung Galaxy A56)
4. மோட்டோ ரேஸர் ப்ளஸ் 2024 (Moto Razr Plus 2024)
5. மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2025 ( Moto G Stylus 2025)
பிக்சல் 10ஏ விலை: இந்தியாவில் கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் விலை (Pixel 10a Price in India) ரூ.49,999 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது
பிக்சல் 10ஏ ஆபர்: அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, கூகுள் நிறுவனமானது தேர்ந்தெடுக்கப்பட்ட HDFC வங்கி கார்டுகளுடன் ரூ.3,000 உடனடி கேஷ்பேக், 24 மாத வட்டி இல்லாத EMI விருப்பம் மற்றும் ரூ.3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் இந்த போன் கூகுள் பிக்சல் மேம்படுத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாகவும இருக்கும்.
பிக்சல் 10ஏ விற்பனை: ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் - கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மற்றும் கூகுள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் வழியாக முன்பதிவு செய்யலாம். கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் விற்பனை ஆனது வருகிற மார்ச் 6 ஆம் தேதி முதல் தொடங்கும். இந்த ஸ்மார்ட்போன் பெர்ரி, ஃபாக், லாவெண்டர் மற்றும் அப்சிடியன் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கிறது.
முன்னதாக அறிமுகமான பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 7 ஆண்டுகளுக்கு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்ஸ்
- டூயல் சிம் (நானோ+இசிம்) ஆதரவு
- 60Hz மற்றும் 120Hz இடையேயான ரெஃப்ரெஷ் ரேட்
- 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.3-இன்ச் ஆக்டுவா டிஸ்பிளே
- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/2-இன்ச் சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், குளோஸ்டு-லூப் ஆட்டோஃபோகஸ் மற்றும் f/1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (இது 8x வரை சூப்பர் ரெஸ் ஜூமையும் ஆதரிக்கிறது)
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (இது 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் f/2.2 அபெர்க்ஷரை கொண்டுள்ளது)
- முன்பக்கத்தில் f/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 5100mAh பேட்டரி
- கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (Qi) சார்ஜிங்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணிநேர பேட்டரி லைஃப்
- எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் மோட்-ல் 100 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஃபேஸ் அன்லாக் ஆதரவு


Click it and Unblock the Notifications