Home
Mobile

108MP கேமரா, 6.5-இன்ச் டிஸ்பிளே, 8GB ரேம், 5000mAh பேட்டரி! இப்படி ஒரு NOKIA HMD போனுக்கு தான் வெயிட் பண்ணோம்!

நோக்கியா (NOKIA) பிராண்டட் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது (பழைய நோக்கியா மாடல்களை அப்படியே காப்பி அடித்து) தனது சொந்த பிராண்டிங்கின் கீழ் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தொடங்கி சில மாதங்கள் ஆகிறது.

ஆரம்பத்தில் இது நோக்கியா ரசிகர்களை எரிச்சல் அடைய செய்திருந்தாலும் கூட.. எச்எம்டி க்ரெஸ்ட் 5ஜி (ரூ.14,499), எச்எம்டி கிரெஸ்ட் மேக்ஸ் 5ஜி (ரூ.16,498) மற்றும் எச்எம்டி ஸ்கைலைன் (ரூ.35,999) ஆகிய 3 மாடல்களுக்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து எச்எம்டி ஃப்யூஷன் (HMD Fusion) ஸ்மார்ட்போனும் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது.

இப்படி ஒரு NOKIA HMD போனுக்கு தான் வெயிட் பண்ணோம்!

இதை உறுதிப்படுத்தும் மைக்ரோசைட் ஆனது, தற்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில் லைவ் ஆகி உள்ளது. ஆனால் சரியான வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் இது வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும். அமேசானின் மைக்ரோசைட் வழியாக எச்எம்டி ஃப்யூஷன் ஸ்மார்ட்போனை பற்றிய சில நுட்பமான தகவல்களை தெரிந்துகொள்ள முடிகிறது.

க்ளோபல் வேரியண்ட்டை போலவே இந்திய வேரியண்ட்டும் கஸ்டமைசபிள் அவுட்புட்களுடன் (Customizable Outputs) வரும், வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவை (Wireless charging support) கொண்டிருக்கும் மற்றும் செல்ஃப் ரிப்பேருக்கான ஆதரவையும் (Self repair support) வழங்கும். மேலும் எச்எம்டி ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் ஆனது க்ளோபல் வேரியண்ட்டில் நாம் கண்ட அதே அம்சங்களை தக்கவைத்தும் கொள்ளும்.

எச்எம்டி ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொருத்தவரை இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். சிப்செட்டை பொறுத்தவரை இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும். கேமராக்களை பொறுத்தவரை இது 108எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும்.

பேட்டரியை பொறுத்தவரை 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு2 வருட சாஃப்ட்வேர் அப்டேட்கள் கிடைக்கும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. விலையை பொறுத்தவரை, எச்எம்டி ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் ரூ.23,499 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து எச்எம்டி நிறுவனம் சில ஃபீச்சர் போன்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அப்படியாக இந்நிறுவனம் அடுத்து அறிமுகம் செய்யவுள்ளது - எச்எம்டி ஐகான் ஃபிளிப் 1 மாடலாகும். இது கடந்த ஆகஸ்ட் 2022 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 2660 ஃபிளிப் (Nokia 2660 Flip) போனின் அப்கிரேடட் வெர்ஷனாக இருக்கும்.

எச்எம்டி ஐகான் ஃபிளிப் 1 போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது டபுள் டிஸ்பிளே (1.7 இன்ச் எக்ஸ்டர்னல் டிஸ்பிளே + 2.8-இன்ச் மெயின் எல்சிடி டிஸ்பிளே), 2-மெகாபிக்சல் ஸ்டாண்டர்ட் ஃபோகஸ் ரியர் கேமரா யூனிட், 1500mAh பேட்டரி, 48எம்பி ரேம் மற்றும் 128எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ், யுனிசாக் டி127 சிப்செட், எஸ்30 பிளஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆகியவைகளை கொண்டிருக்கும். விலை சுமார் ரூ.4500-க்கு அருகில் செல்லாம்.

முன்னதாக அறிமுகமான எச்எம்டி க்ரெஸ்ட் சீரிஸின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, எச்எம்டி க்ரெஸ்ட் 5ஜி, எச்எம்டி கிரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஆகிய இரண்டுமே 6.67-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளன. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே யுனிசாக் டி760 5ஜி சிப்செட் (Unisoc T760 5G chipset) மூலம் இயக்கப்படுகின்றன மற்றும் 5,000mAh பேட்டரி, ஈஸி செல்ஃப் ரிப்பேர் அம்சங்களுடன் (easy self-repair features) வருகின்றன.

எச்எம்டி க்ரெஸ்ட் 5ஜி மற்றும் எச்எம்டி கிரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையேயான முக்கிய வேறுபாட்டை பொறுத்தவரை, இரண்டுமே 50 மெகாபிக்சல் செல்பீ கேமராக்களை கொண்டிருந்தாலும், ரியர் கேமரா செட்டப்பில் எச்எம்டி க்ரெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
4th Model in HMD Lineup Smartphones HMD Fusion India Launch Confirmed Price Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X