Home
Mobile

வெறும் ரூ.6999 க்கு 4G போன்.. ரூ.8999 க்கு 5G போன்.. 8 POCO போன்களின் மீது பொளந்து கட்டும் ஆஃபர்.. இதோ லிஸ்ட்!

வருகிற அக்.8 ஆம் தேதி தொடங்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் (Flipkart Big Billion Days) விற்பனையின் போது, ஆஃபர் விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமென்கிற திட்டம் உங்களிடம் இருந்தால்.. இந்த கட்டுரை முழுக்க-முழுக்க உங்களுக்கானது தான்!

ஒரு வார காலத்திற்கு.. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அக்டோபர் 15 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையின் போது பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களின் மீது நம்ப முடியாத தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்க உள்ளது.

8 POCO போன்களின் மீது பொளந்து கட்டும் ஆஃபர்.. இதோ லிஸ்ட்!

இதற்கிடையில், எந்தெந்த போக்கோ போன்கள் மீது தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கும் என்கிற விவரங்கள் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் மொத்தம் 8 போக்கோ ஸ்மார்ட்போன்கள் உள்ளன? அதென்ன மாடல்கள்? அவைகளின் தள்ளுபடி விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

01. போக்கோ எம்5 (POCO M5): பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, லெதர் லைக் பேக் டிசைன் (Leather Like Back Design) உடன் வரும் போக்கோ எம்5 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,999 க்கு பதிலாக வெறும் ரூ.6999 க்கு வாங்க கிடைக்கும்.

02. போக்கோ எம்4 5ஜி (POCO M4 5G): இந்த பிளிப்கார்ட் விற்பனையின் போது ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை தேடுபவர்கள் போக்கோ எம்4 5ஜி மாடலை கருத்தில் கொள்ளாலாம். ஏனென்றால் இது ரூ.15,999 க்கு பதிலாக ரூ.9999 க்கு வாங்க கிடைக்கும்.

03. போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G): பிரீமியம் கிளாஸ் டிசைன் உடன் வரும் போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, அசல் விலையான ரூ. 14,999 க்கு பதிலாக ரூ.8999 க்கு வாங்க கிடைக்கும்.

04. போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி (POCO X5 Pro 5G): 108எம்பி மெயின் கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ராசஸர் உடன் வரும் போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.25,999 ஆகும். பிளிப்கார்ட் விற்பனையின் போது இதன் விலை ரூ.20000 க்கு கீழ் இறங்கி வரும்.

05. போக்கோ சி55 (POCO C55): 50எம்பி கேமரா, பிரீமியம் லெதர் டிசைன் உடன் வரும் போக்கோ சி55 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.13,999 ஆகும். அனால் இது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ரூ.10,000 க்குள் வாங்க கிடக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

06. போக்கோ எஃப்5 (POCO F5): 120ஹெர்ட்ஸ் அமோஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 2 சிப்செட் போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் போக்கோ எஃப்5 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.34,999 ஆகும். இதுவும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது; இருப்பினும் சரியான விலையை பிளிப்கார்ட் பகிரவில்லை.

07. போக்கோ சி50 (POCO C50): 5000எம்ஏஎச் பேட்டரி, பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் போக்கோ சி50 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.8,999 ஆகும். இதுவும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது; இருப்பினும் சரியான விலையை பிளிப்கார்ட் பகிரவில்லை.

08. போக்கோ எக்ஸ்5 5ஜி (POCO X5 5G): 120ஹெர்ட்ஸ் எஸ்அமோஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.20,999 ஆகும். இதுவும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது; இருப்பினும் சரியான விலையை பிளிப்கார்ட் பகிரவில்லை.

நேரடி தள்ளுபடியை தவிர்த்து, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடக் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் கீழ் 10 சதவீதம் வரையிலான உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.

மேலும் இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகள் அகா கிடைக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். நீங்களொரு பிளிப்கார்ட் பிளஸ் மெம்பராக இருந்தால், உங்களுக்கு அக்,7 ஆம் தேதி முதலே பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கான முன்கூட்டிய அணுகல் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
4G Phone For Rs 6999 5G Mobile For Rs 8999 Poco Smartphones Best Offers Flipkart Big Billion Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X