அடி தூள்.. ரூ.9,499 பட்ஜெட்ல 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் month end mobile fest எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி (Samsung Galaxy A14 5G) போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A14 5G specifications): Exynos 1330 சிப்செட் வசதியைக் கொண்டு சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. OneUI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகமானது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
மாலி ஜி68 எம்பி2 ஜிபியு (Mali-G68 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சாம்சங் போனின் எடை 202 கிராம் ஆகும்.
6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போன். 1,080x2,40பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பின்பு இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்போன் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது கேலக்ஸி ஏ14 5ஜி போன். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி 5000mAh பேட்டரி உடன் இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது
5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 5, ப்ளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த சாம்சங் மாடல்.


Click it and Unblock the Notifications








