அடிச்சான் பாரு அமேசான்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஆஃபரில் தரமான Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, எக்ஸ்நோஸ் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது தற்போது சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி போனுக்கு அமேசான் தளத்தில் 47 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M34 5G specifications): 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 செக்யூரிட்டி உடனான அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இது பெரும்பாலான சாம்சங் போன்களில் உள்ள "பாரம்பரிய வடிவமைப்பான இன்ஃபினிட்டி யு (Infinity U) டிசனையும் பெற்றுள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
ஓஐஎஸ் ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
அதேபோல் இந்த போனின் கேமரா யூனிட் ஆனது மான்ஸ்டர் ஷாட் 2.0 (Infinity U) என்று அழைக்கப்படும் கேமரா-சென்ட்ரிக் அம்சத்துடன் வருகிறது. இதன்கீழ் நீங்கள் ஒரே டேக்கில் பல ஷாட்களை கிளிக் செய்ய முடியும். பின்னர் எடுக்கப்பட்ட அனைத்திலும் இருந்து, எது பெஸ்ட் ஷாட் என்பதையும் தேர்ந்தெடுக்க முடியும்.
ஃபன் மோட் (Fun mode) மற்றும் நைட்டோகிராஃபி (Nightography) போன்ற கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன. சாம்சங்கின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸிநோஸ் 1280 சிப்செட் (Exynos 1280 SoC) மூலம் கேலக்ஸி எம்34 5ஜி இயக்கப்படுகிறது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்தது.

சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி-க்கு நான்கு வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஐந்து வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 6000எம்ஏஎச் என்கிற 'மான்ஸ்டர்' பேட்டரியை பேக் செய்கிறது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications