Home
Mobile

வெறும் ரூ.5,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. ஆஃபரில் சாம்சங் போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போனுக்கு 47 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.5,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

வெறும் ரூ.5,999 போதும்.. ஆஃபரில் சாம்சங் போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸ் எப்04 அம்சங்கள் (Samsung Galaxy F04 Specifications): 6.5-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸ் எப்04 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 720x1560 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த உதவும் இந்த கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன். அதேபோல் One UI சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்க்பட்டுள்ளது. ஜேட் பர்பில் மற்றும் ஓபல் கிரீன் நிறங்களில் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் 13எம்பி + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையாகப் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மாரட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

வெறும் ரூ.5,999 போதும்.. ஆஃபரில் சாம்சங் போன்.. எந்த மாடல்?

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கம்மி விலையில் ஒரு நல்ல போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இதை வாங்குவது நல்லது.

4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த சாம்சங் 4ஜி ஸ்மார்ட்போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
47 Percent Discount on SAMSUNG Galaxy F04 in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X