Home
Mobile

அடிச்சு தூக்குது சேல்.. ரூ.10000 பட்ஜெட்ல சாம்சங்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 1 டிபி மெமரி சப்போர்ட் போன்ற பீச்சர்களுடன் பிரீமியம் லுக்கில் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி (Samsung Galaxy A14 5G) போன் கிட்டத்தட்ட பாதிக்குப்பாதி விலையில் கிடைக்கிறது. 10X டிஜிட்டல் ஜூமிங், ஆட்டோபோகஸ் போன்ற பட்ஜெட்டில் கிடைக்காத பீச்சர்களும் இந்த சாம்சங் கேலக்ஸி போனில் கிடைக்கின்றன. இந்த போனின் பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் குறித்த விவரங்கள் இதோ.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A14 5G Specifications): இந்த சாம்சங் போனில் 6.6 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட இன்பினிட்டி-வி எல்சிடி (Infinity-V LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 16 மில்லியன் கலர் டெப்த் உள்ளது. இதுவொரு ரவுண்டெட் கார்னர் டிஸ்பிளே மாடலாகும்.

அடிச்சு தூக்குது சேல்.. ரூ.10000 பட்ஜெட்ல சாம்சங்.. 50MP கேமரா மாடல்!

இந்த பட்ஜெட்டிலும் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. மேலும், ஆட்டோபோகஸ் (Auto Focus) மற்றும் 10X டிஜிட்டல் ஜூமிங் (Digital Zooming) பேக் செய்துள்ளது. இதுபோக ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. ஆகவே, இந்த டிரிபிள் ரியர் கேமராவில் (Triple Rear Camera) மிட்-ரேஞ்ச் அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

13 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போனில் 2 மெமரி வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆகவே, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த வேரியண்ட்களிலும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் பேக் செய்யப்பட்டுள்ளது.

ஒன்யுஐ 5.0 (OneUI 5.0) கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட சாம்சங் நிறுவனத்தின் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1330 5என்எம் (Octa Core Exynos 1330 5nm) சிப்செட் வருகிறது. மீடியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாலி ஜி68 எம்பி2 (Mali G68 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side-mounted Fingerprint) கிடைக்கிறது.

அடிச்சு தூக்குது சேல்.. ரூ.10000 பட்ஜெட்ல சாம்சங்.. 50MP கேமரா மாடல்!

5000mAh பேட்டரி வருகிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), டைப்-சி போர்ட் (Type-C Port) மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. இந்த சாம்சங் போனின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/ NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) வருகிறது.

9.1 மிமீ தடிமன் மற்றும் 205 கிராம் எடை உள்ளது. டார்க் ரெட் (Dark Red), லைட் கிரீன் (Light Green) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த போன் அறிமுகமானபோது, இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,499ஆக இருந்தது. அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,999ஆக இருந்தது.

ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் மாடலானது, வெறும் ரூ.10,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த போனை ஏர்டெல் லாக்டு மாடலாக வாங்கினால், கூடுதலாக ரூ.750 டிஸ்கவுண்ட் கிடைக்கும். அதாவது, போனை வாங்கிய பிறகு 18 மாதங்களுக்கு ஏர்டெல் சிம் கார்டு பயன்படுத்த வேண்டும். அதன்பிறகு வேறு சிம் கார்டுக்கு மாறி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
47 Percent Discount on Samsung Galaxy A14 5G With 50MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X