மிரளுது விற்பனை.. ஆஃபர் ரேட்ல 7000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை பட்ஜெட்டில் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு ரியல்மி 16எக்ஸ் 5ஜி (Realme 16x 5G) பக்காவான ஆப்ஷனாக இருக்கும். 7000mAh பேட்டரியுடன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்துள்ளது. தள்ளுபடி விலைக்கு கிடைப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பிளிப்கார்ட் தளத்தில் 47 சதவீத தள்ளுபடி போக 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.25,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளை பயன்படுத்தி கூடுதலாக ரூ.1,300 தள்ளுபடியையும் பெற்று கொள்ளலாம். ரூ.24,699 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ரியல்மி 16எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 16x 5G Specifications): 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (6nm Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட்டை இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) கிடைக்கிறது. இதில் அமோலெட் டிஸ்பிளே கொடுக்கப்படவில்லை. இருப்பினும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை பேக் செய்துள்ளது. இதில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.
1200 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஐ நோட்ஸ் அசிஸ்டன்ட் (AI Notes Assistant), ஏஐ எரைசர் (AI Eraser) உள்ளிட்ட பீச்சர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ரியர் கேமராவுக்கு அருகில் ஏஐ பல்ஸ் லைட் (AI Pulse Light) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமராவை இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது.
1080p வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமரா இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. பாண்டா கிளாஸ் (Panda glass) டிஸ்பிளே புரொடெக்சன் மட்டுமல்லாமல், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த ரியல்மி 16எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 8.88 எம்எம் தடிமன் கொண்ட பாடியில் 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. பேட்டரியுடன் 217 கிராம் எடை கொண்டுள்ளது. பைபாஸ் சார்ஜிங் மற்றும் 6.5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது.
இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. அல்ட்ரா-லீனியர் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Ultra Linear Bottom Ported Speaker) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒயிட் மற்றும் பிரவுண் ஆகிய கலர்களில் வாங்கி கொள்ள கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications