Home
Mobile

அரண்டுபோன மார்க்கெட்.. முழுசா ரூ.15,000 டிஸ்கவுண்ட்.. 30X ஸ்பேஸ் ஜூமிங் கேமரா.. 4500mAh பேட்டரி.. சாம்சங் வேற!

ஒட்டுமொத்த சாம்சங் பிரியர்களையும் அல்லோலகல்லோலம் செய்யும் வகையில், சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ (Samsung Galaxy S21 FE) போனுக்கு பிளிப்கார்ட்டில் முழுதாக 46 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ரூ.15 ஆயிரத்தை எட்டுவதால், ஆர்டர்கள் விண்ணை முட்டி வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S21 FE Specifications): இந்த சாம்சங் போன் 6.4 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே (Infinity-O Dynamic AMOLED) மாடலாகும்.

முழுசா ரூ.15,000 டிஸ்கவுண்ட்.. 30X ஸ்பேஸ் ஜூமிங் கேமரா.. எந்த மாடல்?

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) மற்றும் ஒன் யுஐ 14 (One UI 4) கொண்ட ஆக்டா-கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2100 (Octa-Core Samsung Exynos 2100) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு மாலி ஜி - 78 எம்பி 14 (Mali - G78 MP14) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த சாம்சங் போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய இரண்டு மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த மாடலில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.

ஆகவே, 12 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (Ultrawide Camera) + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா (Telephoto Camera) வருகிறது. இந்த கேமராவில் 30X ஸ்பேஸ் ஜூமிங் (30X Space Zoom) மற்றும் 3X ஆப்டிகல் ஜூமிங் (3X Optical Zoom) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த இரண்டு கேமராக்கள் மூலம் டூயல் வீடியோ ரெக்காட்டிங் செய்துகொள்ள முடியும். இந்த சாம்சங் மாடலில் 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (Wired Fast Charging) மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) சப்போர்ட் கொண்ட 4500mAh பேட்டரி வருகிறது.

அதோடு வயர்லெஸ் பவர் ஷேர் (Wireless Power Share) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. மேலும், டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) மற்றும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-Display Optical Fingerprint Scanner) ஆகியவை வருகின்றன.

இந்த போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரை, வைபை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), யுஎஸ்பி 3.1 (USB 3.1) மற்றும் என்எப்சி (NFC) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சாம்சங் எஸ்21 எப்இ போன் வைட் (White), லாவெண்டர் (Lavender), கிராஃபைட் (Graphite) மற்றும் ஆலிவ் (Olive) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த போனின் விலை ரூ.74,999ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டபோது, ரூ.60,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்தது. அந்த வகையில், இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.54,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.58,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, பிளிர்கார்ட் (Flipkart) தளத்தில் கிட்டத்தட்ட 46 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ரூ.74,999 விலையில் இருந்து ரூ.35,000 குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே, வெறும் ரூ.39,999க்கு, இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ மாடலை வாங்கிக்கொள்ள முடியும். எப்படி பார்த்தாலும் ரூ.15,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. அதோடு ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் கேஸ்பேக் மற்றும் எச்டிஎப்சி கிரெடிட் ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிரீமியம் சாம்சங் போன் வங்க விருப்பம் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்பாக இந்த தள்ளுபடி அறிவிப்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
46 Percent Discount on Samsung Galaxy S21 FE in Flipkart Check Price Specifications Offer Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X