Home
Mobile

தட்டி தூக்குறாங்க..6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 128GB மெமரி.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி (SAMSUNG Galaxy F34 5G) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போனுக்கு 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

தட்டி தூக்குறாங்க.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி அம்சங்கள் ( SAMSUNG Galaxy F34 5G Specifications): 6.4-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், ப்ளூ-லைட் பாதுகாப்பு வசதி, விஷன் பூஸ்டர் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

6ஜபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

தட்டி தூக்குறாங்க.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங். குறிப்பாக இந்த போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் கேமரா மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போனில் எக்ஸிநோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்டபோனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு OneUI 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (ஓஎஸ்) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

தட்டி தூக்குறாங்க.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி (Samsung Galaxy F34 5G) ஸ்மார்ட்போனில் 6000 எம்எஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக 5ஜி, 4ஜி வோல்ட்இ, என்எப்சி, வைஃபை, புளூடூத் வி5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
46 Percent Discount on SAMSUNG Galaxy F34 5G With 6GB Ram in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X