Home
Mobile

கிடுகிடுவென குறைந்த Samsung 5ஜி போன் விலை.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 128GB மெமரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி (Samsung Galaxy A23 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவரும். இப்போது கேலக்ஸி ஏ23 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,399 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை மிகவும் கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

கிடுகிடுவென குறைந்த Samsung 5ஜி போன் விலை.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A23 5G specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் 5. பின்பு 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 (Qualcomm Snapdragon 695) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். பின்பு One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கிறது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள்மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன்.

கிடுகிடுவென குறைந்த Samsung 5ஜி போன் விலை.. எந்த மாடல்?

குறிப்பாக 5000mAh பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன். எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், Geomagnetic சென்சார், கிரிப் சென்சார், விர்ச்சுவல் லைட்டிங் சென்சார் மற்றும் விர்ச்சுவல் ப்ராக்ஸிமிட்டி சென்சார் போன்ற பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன்.

லைட் ப்ளூ, ஆரஞ்சு, சில்வர் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். பின்பு புளூடூத் 5.1, டூயல்-பேண்ட் வைஃபை, 5ஜி, 4ஜி, ஜிபிஎஸ் போன்ற அசத்தலான கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் எடை 197 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
46 Percent Discount on Samsung Galaxy A23 5G with 4GB Ram in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X