வெளுத்து கட்டும் விற்பனை.. 46 சதவீத ஆஃபரில் 8000mAh பேட்டரி Realme 5G போன்.. 45W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. இதில் 8000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 45W ஃபாஸ்ட் சார்ஜிங், பைபாஸ் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் வெளியான ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் இப்போது தள்ளுபடி விலைக்கு வந்து பட்டையை கிளப்பி வருகிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 46 சதவீத தள்ளுபடி விலைக்கு 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.18,999 விலைக்கு வாங்கலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.500 தள்ளுபடியும் பெற்று மேலும் மலிவான விலைக்கு இந்த ரியல்மி பி4ஆர் 5ஜி போனை வாங்கி கொள்ளலாம்.

ரியல்மி பி4ஆர் 5ஜி அம்சங்கள் (Realme P4R 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) கிடைக்கிறது.
6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. 254 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் பாண்டா 1681 (Panda 1681) கவர் கிளாஸ் கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமராவில் ஜிசி50எப்6 (GC50F6) சென்சார் மற்றும் எப்/1.8 அபெர்சர் கிடைக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் கொண்டுள்ளது. போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் மோட் (Night Mode), ஸ்ட்ரீட் மோட் (Street Mode) மற்றும் பனோரமா மோட் (Panorama Mode) கிடைக்கிறது. மேலும், சினிமாடிக் மோட் (Cinematic), டூயல் வியூ வீடியோ (Dual-view video) கொடுத்துள்ளது.
ஹை-ரெஸ் (HI-RES), டில்ட்-ஷிப்ட் (TILT-SHIFT) போன்ற மோட்களும் கிடைக்கின்றன. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த பேட்டரிக்கு பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) சப்போர்ட் கிடைக்கிறது.
மேலும், வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் (Wired Reverse Charging) கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய பேட்டரி கிடைப்பதால், ஏஐ பவர் மேனேஜ்மென்ட் (AI Power Management) உள்ளது. இதில் ஏஐ லாங்-லைப் அல்கோரிதம் (AI Long Life Algorithm), ஏஐ நைட் சார்ஜிங் மோட் (AI Night Charging Mode) மற்றும் ஏஐ கோல்டு சார்ஜிங் மோட் (AI Cold Charging Mode) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன.
இந்த பேட்டரியுடன் 8.8 எம்எம் தடிமன் மற்றும் 224 கிராம் எடை கொடுத்துள்ளது. IP65 ரேட்டிங் மற்றும் MIL-STD 810H சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் அல்ட்ரா லீனியர் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Ultra-Linear Bottom-ported Speaker) கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications