Home
Mobile

அடிச்சு புடிச்சு ஆர்டர்.. 45 சதவீத ஆஃபரில் Samsung ஸ்மார்ட்போன்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த மாடல்?

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி போன்ற பக்கா பீச்சர்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி (Samsung Galaxy M47 5G) ஸ்மார்ட்போன் இப்போது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை என்ன? இந்த விலைக்கு என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டுக்கு 45 சதவீத தள்ளுபடி கொடுக்கப்படுள்ளது. ஆகவே, ரூ.25,999 விலைக்கு வாங்கலாம். இந்த தள்ளுபடி போக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால், ரூ.1,750 தள்ளுபடி கிடைக்கும். ஆகவே, ரூ.24,249 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இதில் என்னென்ன பீச்சர்கள் கிடைக்கும்.

அடிச்சு புடிச்சு ஆர்டர்.. 45 சதவீத ஆஃபரில் Samsung ஸ்மார்ட்போன்!

சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M47 5G Specifications): அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 4என்எம் 5ஜி (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 3 4nm 5G) சிப்செட்டை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஒன் யுஐ 8.5 (Samsung One UI 8.5) கிடைக்கிறது.

6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்கிரேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) சிப்செட்டை கொடுத்துள்ளது. ரியர் கேமரா செட்டப்பை பார்க்கையில் 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

12 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் சைடு-மவுண்ட் மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரை (Side-mounted Fingerprint Sensor) மட்டுமே கொடுத்து இருக்கிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுத்து இருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது.

கேமராவில் ரீ-கிரியேட், ரீ-டச் போன்ற ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன. மல்டி மீடியாவில் ஆன்-டிவைஸ் வாய்ஸ்மெயில, ஏஐ வாய்ஸ் டிரான்கிரிப்ஷன் உள்ளிட்டவை கிடைக்கின்றன. ரோக் ரெட் மற்றும் பிளேஸ் ப்ளூ ஆகிய கலர்களில் இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ. 4ஜி வோஎல்டிஇ, வை-பை 802.11 ஏசி கிடைக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் கஸ்டமர்களில் மிட்-ரேஞ்ச் பட்ஜெட் மாடல்களுக்கு பணம் செலவு செய்ய முடியாமல் இருப்போர், அந்த விலை மாடல்களில் கிடைக்கும் டிசைனை அதைவிட கம்மியான பட்ஜெட்டில் பெற விரும்பினால், இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம்.

Best Mobiles in India

English summary
45 Percent Discount on Samsung Galaxy M47 5G With 50MP Camera in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X