Home
Mobile

அதிர போகுது பிளிப்கார்ட்.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் 6.6-இன்ச் டிஸ்பிளே, 50MP கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போனுக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

அதிர போகுது பிளிப்கார்ட்.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A14 5G specifications): Exynos 1330 சிப்செட் வசதியைக் கொண்டு சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு OneUI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் மாலி ஜி68 எம்பி2 ஜிபியு (Mali-G68 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. 1,080x2,40பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்போன். எனவே இதன் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன்.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது கேலக்ஸி ஏ14 5ஜி போன். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த சாம்சங் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 5, ப்ளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன்.

அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் இந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
45 Percent Discount on Samsung Galaxy A14 5G with 6GB Ram in Flipkart month end mobile festival Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X