பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.29,000 விலை குறைப்பு.. Google பிக்சல் 7 ஆர்டர்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே!
பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் விற்பனையில் (Flipkart Flagship Sale) கூகுள் பிக்சல் மாடல்களுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. முழுதாக ரூ.29,000 விலை குறைப்பில் கூகுள் பிக்சல் 7 (Google Pixel 7) போன் வருகிறது. ஆகவே, ரூ.60000 பட்ஜெட்டில் வெளியான இந்த போனை வெறும் ரூ.30000 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதேபோல கூகுள் பிக்சல் 7 ப்ரோ மாடலும் இதுவரையில் கிடைக்காத டிஸ்கவுண்ட் விலையில் ஆர்டருக்கு வருகிறது. இந்த போன்களின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.
கூகுள் பிக்சல் 7 அம்சங்கள், விலை (Google Pixel 7 Specifications Price): இந்த பிக்சல் போனில் 6.32 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு உள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் கொண்ட கூகுள் டென்சார் ஜி2 (Google Tensor G2) சிப்செட் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது.
ஓஐஎஸ் (OIS) மற்றும் 10x டிஜிட்டல் ஜூமிங், 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 10.8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. IP68 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகிறது. 30W ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 4355mAh பேட்டரி வருகிறது.
இந்த கூகுள் பிக்சல் 7 போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.59,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.32,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.30,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.
கூகுள் பிக்சல் 7 ப்ரோ அம்சங்கள், விலை (Google Pixel 7 Pro Specifications Price): இந்த ப்ரோ மாடலில் 6.7 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) எல்டிபிஓ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வருகிறது.
இந்த ப்ரோ மாடலிலும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் வருகிறது. அதேபோல கூகுள் டென்சார் ஜி2 சிப்செட் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 12 அல்ட்ரா வைடு கேமரா + 48 டெலிபோட்டோ கேமரா வருகிறது. 4.8x ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 30x டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 4K ரெக்கார்டிங் வருகிறது.
10.8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. IP68 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. 30 வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த கூகுள் பிக்சல் 7 ப்ரோ மாடலில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டைப்-சி ஆடியோ, இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் வருகிறது.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.84,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.44,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ரூ.2000 டிஸ்கவுண்ட் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.42,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








