Home
Mobile

ஆர்டர் ரிப்பீட்டு.. ரூ.8,549 போதும்.. 8GB ரேம்.. 5000mAh பேட்டரி.. HD டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்தியாவில் மலிவு விலை போன்களில் பக்காவான அம்சங்களுடன் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற விவோ ஒய்02டி (Vivo Y02T) மாடலுக்கு அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது. அதோடு பிளிப்கார்ட்டில் கேஷ்பேக் ஆஃபரும் வந்துள்ளது. இந்த போனின் முழு அம்சங்கள், விலை மற்றும் ஆஃபர் விவரங்கள் இதோ.

விவோ ஒய்02டி அம்சங்கள் (Vivo Y02T Specifications): இந்த விவோ போன் 6.51 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் ஆட்டோமேடிக் பிரைட்னஸ் கன்ட்ரோல் (Automatic Brightness Control) வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13) கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.8549 போதும்.. 8GB ரேம்.. 5000mAh பேட்டரி.. HD டிஸ்பிளே.. எந்த போன்?

இந்த மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்எம் (Octa Core Mediatek Helio P35 12nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஃபவர்விஆர் ஜிஇ8320 (PowerVR GE8320) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த விவோ போனில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் வருகிறது.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்டுள்ளது. அதோடு மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) இடம் பெற்றுள்ளது. இந்த போனில் சிங்கிள் ரியர் கேமரா சிஸ்டம் (Single Rear Camera System)கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய 8 எம்பி மெயின் கேமரா வருகிறது. 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த மெயின் கேமராவில் பேஸ் பியூட்டி (Face Beauty) மற்றும் டைம் லேப்ஸ் (Timelapse) ஆகிய மோட்கள் வருகின்றன. அதேபோல செல்பீ கேமராவில் பேக்கெ மோட் (BOKEH MODE) வருகிறது.

இந்த விவோ போனில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 18 மணி நேர வீடியோ பிளேபேக் கொண்டிருக்கிறது. இந்த போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், 4ஜி எல்டிஇ (4G LTE), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), யுஎஸ்பி 2.0 (USB 2.0), ஜிபிஎஸ் (GPS), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஓடிஜி (OTG) ஆகியவை வருகின்றன.

இந்த விவோ போன் காஸ்மிக் கிரே (Cosmic Grey) மற்றும் சன்செட் கோல்டு (Sunset Gold) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடலின் விலை ரூ.9,499ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலையில், விவோ நிறுவனம் ரூ.500 அதிரடியாக குறைத்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.450 கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேஷ்பேக்கை பெற ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் (Axis Bank Credit Card) கார்டை பயன்படுத்த வேண்டும். ஆகவே, ரூ.500 விலை குறைப்பு, ரூ.450 கேஷ்பேக் போக வெறும் ரூ.8,549க்கு இந்த விவோ மாடலை வாங்கிக் கொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல், ரூ.8,400 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. மிகவும் கம்மியான விலையில் பக்காவான டிசைன் மற்றும் சிப்செட், மீடியம் கேமரா, நல்ல பேட்டரி பேக்கப் கொண்ட போன் வாங்க வேண்டும் என்றால், இந்த விவோ ஒய்02டி போன் சிறந்த தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
43 Percent Discount on Vivo Y02T With 8GB RAM in Flipkart Check Price Specifications Offer Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X