Home
Mobile

பொசுக்குனு சாம்சங்.. ரூ.7,999 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. FHD+ டிஸ்பிளே.. 1TB மெமரி.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் (Amazon Sale) 50 எம்பி கேமரா, ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 1டிபி மெமரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்14 (Samsung Galaxy M14) போன் பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்டில் கிடைக்கிறது.

இவ்வளவு கம்மியான பட்ஜெட்டிலும் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம், அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு மற்றும் மிட்-ரோஞ்ச் டிசைன் கொண்டிருக்கிறது. 2 ஓஎஸ் அப்கிரேட் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் வருகிறது. ஆகவே, பட்ஜெட்டிலும் மிரளவிடும் இந்த சாம்சங் மாடலின் முழு அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.

பொசுக்குனு சாம்சங்.. ரூ.7,999 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி!

சாம்சங் கேலக்ஸி எம்14 அம்சங்கள் (Samsung Galaxy M14 Specifications): இந்த சாம்சங் மாடலில் 6.7 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட இன்பினிட்டி-யு எல்சிடி (Infinity-U LCD) டிஸ்பிளே மாடலாகும். 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் ஆட்டோபோகஸ் (Auto Focus) மற்றும் 10 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (Digital Zoom) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 போனில் ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 13 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. மேலும், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) பயன்படுத்தலாம்.

பொசுக்குனு சாம்சங்.. ரூ.7,999 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி!

இந்த மாடலில் 2 ஓஎஸ் அப்கிரேட்களுடன் (OS Upgrades) ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஒன் யுஐ 5.1 (One UI 5.1) வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 மொபைல் (Qualcomm Snapdragon 680 Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் வருகிறது.

இந்த சிப்செட் மற்றும் கிராபிக்ஸ் மிட்-ரேஞ்ச் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும். இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 மாடலில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது. அதேபோல 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொண்டிருக்கிறது.

மேலும், டூயல் நானோ சிம் சிலாட், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. இந்த சாம்சங்கில் டூயல் 4ஜி வோஎல்டிடி (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி வருகிறது. ஆர்க்டிக் ப்ளூ (Arctic Blue) மற்றும் சபையர் ப்ளூ (Sapphire Blue) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,499 ஆக நிர்ணயம் இருந்தது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.7999 பட்ஜெட்டில் விற்பனையாகிறது. இதற்கு எந்த பேங்க் கார்டுகளும் தேவையில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
43 Percent Discount on Samsung Galaxy M14 With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X