Home
Mobile

மிரளுது டிஸ்கவுண்ட்.. பொசுக்குனு ரூ.10,000 கட்.. pOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த போன்?

அமேசான் (Amazon) தளத்தில் நினைத்து பார்க்க முடியாத தள்ளுபடியோடு பிஓஎல்இடி டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 33W டர்போபவர் சார்ஜிங், 3800mAh பேட்டரி போன்ற பிரீமியம் அம்சங்களை கொண்ட மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra) விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் ஏற்கனவே, இந்தியாவில் விற்பனைக்கு வந்து மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த வரவேற்பை மேலும் அதிகரிக்க அந்த போனின் புதிய கலர் வேரியண்ட் ஜனவரி 8ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதோடு ரூ.10,000 தள்ளுபடியோடு விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பொசுக்குனு ரூ.10,000 கட்.. pOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த போன்?

அந்த வகையில், அமேசானில் இன்று முதல் விற்பனைக்கு வந்திருக்கிறது. ஒரு அல்ட்ரா பிரீமியம் ஃபிளிப் போனாக இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா வேரியண்ட் இருந்து வருகிறது. இந்த போனின் முழு அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Razr 40 Ultra Specifications): இந்த மோட்டோரோலாவில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8+ Gen 1 4nm Mobile) சிப்செட் வருகிறது.

அதோடு அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது. இந்த போனில் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.9 இன்ச் பிஓஎல்இடி (pOLED) மெயின் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிஐர்10பிளஸ் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதேபோல 3.6 இன்ச் பிஓஎல்இடி அவுட்டர் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவிலும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1100 நிட்ஸ் பிரைட்னஸ் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 2 டிஸ்பிளேவும் அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்.

இந்த போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது. அதேபோல 12 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த மோட்டோ போனில் டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகின்றன. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் IP52 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. 33W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது.

அதோடு 5W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 3800mAh பேட்டரி வருகிறது. ஏற்கனவே, இந்த போனில் விவா மெஜந்தா (Viva Magenta) மற்றும் இன்பினிட் பிளாக் (Infinite Black) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இப்போது, பீச் ஃபஸ் (Peach Fuzz) என்னும் புதிய கலர் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா பீச் ஃபஸ் கலர் வேரியண்ட்டின் விலை ரூ.79,999ஆக இருக்கிறது. இருப்பினும் அறிமுக சலுகையாக ரூ.10000 தள்ளுபடியோடு ரூ.69,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. அல்ட்ரா பிரீமியம் ஃபிளிப் போனானது, பட்ஜெட்டில் வேண்டுமானால், இந்த போனை தேர்வு செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
42 Percent Discount on Motorola Razr 40 Ultra With pOLED Display in Amazon Here Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X