அமேசான் அதிரும்.. 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9x 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 6000mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி கேமரா எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.
அதன்படி அமேசான் தளத்தில் தற்போது ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த போனுக்கு ரூ.314 கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி அம்சங்கள்(iQOO Z9x 5G Specifications): இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் போனில் 6.72 இன்ச் ஃபுல் எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2408 × 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
50 எம்பி ஏஐ மெயின் கேமரா (AI Main Camera) + 2 எம்பி பொக்கெ கேமரா (Bokeh Camera) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். இந்த ரியர் கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். பொக்கெ, போர்ட்ராய்டு மற்றும் நைட் போன்ற பீச்சர்களுடன் 8 எம்பி செல்பீ கேமராவும் இதில் உள்ளது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU)கிராபிக்ஸ் ஆதரவும் இந்த போனில் உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி மாடல்.
ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14)மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு பிரீமியம் டிசைனில் டொர்னாடோ கிரீன் (Tornado Green) மற்றும் ஸ்டார்ம் கிரே (Storm Grey) ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.
6000mAh பேட்டரி வசதியுடன் இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது, மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர 5ஜி, 4ஜி வோஎல்டிஇ, ப்ளூடூத், வை-பை உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இந்த போனில் உள்ளது.


Click it and Unblock the Notifications








