இப்படி இருக்கனும் டிஸ்கவுண்ட்.. ரூ.24,324 ரேட் கட்ல சாம்சங்.. 4700mAh பேட்டரி.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே!
இந்திய மார்கெட்டில் பிரீமியம் மாடலாக களமிறங்கியதால், கேலக்ஸி ஏஐ மட்டுமல்லாமல், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 புரொடெக்சன் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா சிஸ்டம், IP68 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ 5ஜி (Samsung Galaxy S24 FE 5G) போனானது, ரூ.59,999 பட்ஜெட்டில் வெளியாகியது. ஆனால், இப்போது ரூ.35,675 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.24,324 விலை குறைப்பில் வாங்க முடிகிறது. இந்த விலைக்கு முன்பு பீச்சர்கள் எப்படி என்பதை பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy S24 FE 5G Specifications): இந்த சாம்சங் போனில் ஹைலைட் பீச்சராக கேலக்ஸி ஏஐ (Galaxy AI) கிடைக்கிறது. ஆகவே, ஏஐ பவர்ட் எடிட்டிங் ட்டூல்களுடன் போட்டோ அசிஸ்ட் (Photo Assist) கிடைக்கிறது. ஸ்கெட்ச் டூ இமேஜ் (Sketch to Image), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search), லைவ் டிரான்ஸ்லேட் (Live Translate) போன்ற பீச்சர்கள் வருகின்றன.

இதுபோக 7 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 7 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட டெகா கோர் எக்ஸினோஸ் 2400இ 4என்எம் (Deca Core Exynos 2400e 4nm) சிப்செட் கிடைக்கிறது. அதேபோல சாம்சங் நிறுவனத்தின் எக்ஸ்கிளிப்ஸ் 940 ஜிபியு (Xclipse 940 GPU) மற்றும் ஒன் யுஐ 6.1.1 (One UI 6.1.1) வருகிறது.
இந்திய மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. பிளாட் டிசைனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. பிரீமியம் மாடலாக இருப்பதால், டெலிபோட்டோவுடன் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா (OIS டெக்னாலஜி) + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா (OIS டெக்னாலஜி) கிடைக்கிறது.
டெலிபோட்டோ கிடைப்பதால், 3X ஆப்டிகல் ஜூம் கொடுக்கிறது. 10 எம்பி செல்பீ ஷூட்டரை பேக் செய்துள்ளது. மிட்-பிரீமியம் மாடல்களில் அதிகமாக கிடைக்கும். IP68 ரேட்டிங் வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. வயர்லெஸ் சார்ஜிங், 25W வயர்டு சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர் ஷேர் சப்போர்ட் கொண்ட பேட்டரி சிஸ்டம் வருகிறது.
ஆகவே, மேற்கண்ட சப்போர்ட்களுடன் 4700mAh பேட்டரி கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் (On-display Fingerprint) போன்ற வழக்கமாக மிட்-ரேஞ்ச் பீச்சர்கள் கிடைக்கின்றன. கிராஃபைட், ப்ளூ போன்ற கலர்களில் கிடைக்கின்றன. இப்போது, விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ 5ஜி புது விலை (Samsung Galaxy S24 FE 5G New Price): ரூ.59,999 பட்ஜெட்டில் வெளியாகிய 128 ஜிபி மெமரி வேரியண்ட் அமேசான் தளத்தில் ரூ.35,675 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதில் ப்ளூ கலர் மாடலானது ரூ.34,740 பட்ஜெட்டில் கிடைக்கிறது. எப்படியும் ரூ.24,324 விலை குறைப்பில் இப்போது வாங்க கொள்ளலாம். இந்த விலை மாறக்கூடியது.


Click it and Unblock the Notifications








