Home
Mobile

அதிரி புதிரி ஆர்டர்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 128GB மெமரி.. ஆஃபரில் POCO 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் போக்கோ எம்6 ப்ரோ 5ஜி போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 50எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பும் மிகவும் அருமையாக உள்ளது. இப்போது போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 41 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

அதிரி புதிரி ஆர்டர்.. ஆஃபரில் POCO 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ எம்6 ப்ரோ 5ஜி அம்சங்கள் (POCO M6 Pro 5G Specifications): தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மூலம் இயங்குகிறது போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+) எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

அதிரி புதிரி ஆர்டர்.. ஆஃபரில் POCO 5ஜி போன்.. எந்த மாடல்?

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதிரயைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

அதிரி புதிரி ஆர்டர்.. ஆஃபரில் POCO 5ஜி போன்.. எந்த மாடல்?

அதேபோல் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் விரைவில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared sensor), டூயல் நானோ சிம், டைப் - சி சார்ஜிங் போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் ஃபயரிங் லவுட் ஸ்பீக்கர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன. மேலும் புளூடூத் 5.1, வை-பை 6 802.11 ஏசி, 5ஜி உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனின் எடை 199 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
41 Percent Discount on POCO M6 Pro 5G With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X