ஒரே போடு.. முழுசா ரூ.16,000 விலை குறைப்பு.. Flipkart-ல் தூள் கிளப்பும் விற்பனை.. என்ன போன்?
பிளிப்கார்ட் (Flipkart) வளைத்தளமானது, ரியல்மி (Realme) நிறுவனத்தின் பிரபலமான ஜிடி சீரீஸின் (GT Series) கீழ் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது 40% தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதாவது ரூ.16,000 என்கிற மாபெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதென்ன போன்? அதன் அம்சங்கள் என்ன? இதோ விவரங்கள்:
ரூ.16,000 என்கிற தள்ளுபடியை பெற்றுள்ளது ரியல்மி ஜிடி 2 (Realme GT 2) ஸ்மார்ட்போனாகும். தனித்துவமான அம்சங்கள் மற்றும் பயனர்களுக்கு சிறந்த பெர்ஃபார்மென்ஸை வழங்கும் இந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனானது தற்போது நம்பமுடியாத அளவிற்கு மிகக்குறைந்த விலையில், பிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக ரூ.39,999 க்கு விற்பனை செய்யப்பட்ட ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ரூ.16,000 என்கிற நேரடி தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.40கே பட்ஜெட்டில் இருந்த ஒரு ஸ்மார்ட்போன், தற்போது ரூ25கே பட்ஜெட்டிற்கு இறங்கி வந்துள்ளது.
40 சதவிகிதம் தள்ளுபடி மட்டுமல்ல ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனின் மீது வங்கி சலுகைகள் (Bank Offers) மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகையும் (Exchange Offer) கூட கிடைக்கிறது. இதன் மூலம் ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனின் இறுதி விலையை இன்னும் குறைக்கலாம்.
பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு வழியாக ரூ.100 க்கு மேல் ஆர்டர் செய்தால் 5% கேஷ்பேக் கிடைக்கும். ஒருவேளை உங்களிடம் எக்ஸ்சேன்ஜ் செய்ய பழைய ஸ்மார்ட்போன் இருந்தால், உங்கள் பழைய போனின் மாடல் மற்றும் அது வேலை செய்யும் நிலையை பொறுத்து உங்களுக்கான எக்ஸ்சேன்ஜ் வேல்யூ நிர்ணயம் செய்யப்படும்.
ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6.62-இன்ச் அளவிலான ஃபுல்எச்டி+ அமோஎல்இடி டிஸ்பிளே, 128ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 ஆக்டாகோர் ப்ராசஸர், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 33W டர்போசார்ஜர் உடனான 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








