போடு தகிட தகிட.. 24GB ரேம், 108MP கேமரா, 5G ஆதரவு கொண்ட POCO போன் மீது ரூ.9000 விலை குறைப்பு.. எந்த மாடல்?
24ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் ஆதரவு, 108MP ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப், 5ஜி ஆதரவு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை கொண்ட ஒரு போக்கோ ஸ்மார்ட்போன், தற்போது அதன் அசல் விலையில் இருந்து ரூ.9000 தள்ளுபடியை பெற்றுள்ளது. அது போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி (POCO X6 Neo 5G) ஸ்மார்ட்போனாகும்.
தற்போது இது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக 40% என்கிற நேரடி தள்ளுபடியை பெற்று அசல் விளையான ரூ.19,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது, கூடவே தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு (Credit Cards) ரூ,1,000 வரை தள்ளுபடி கிடைக்கும். இப்படியாக மொத்தம் போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி மீது ரூ.9000 தள்ளுபடி கிடைக்கிறது.

போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான எம்ஐயுஐ 14 கொண்டு இயங்குகிறது. இந்த போக்கோ போனுக்கு 2 முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 2400 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 93.30% ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ, 1000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160 மெகாஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6என்எம் மீடோனியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட் (6nm MediaTek Dimensity 6080 SoC) உடன் வருகிறது. இது 12ஜிபி வரையிலான LPDDR4X ரேம், மாலி G57 MC2 ஜிபியு மற்றும் 256GB வரையிலான UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போனில் விர்ச்சுவல் ரேம் விரிவாக்க அம்சமும் உள்ளது. இதன் மூலம் போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த ரேம்-ஐ 24ஜிபி வரை விரிவாக்க முடியும். கேமராக்களை பொறுத்தவரை இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 2 மெகாபிக்சல் ஷூட்டருடன் 3எக்ஸ் சென்சார் ஜூம் கொண்ட 108 மெகாபிக்சல் சாம்சங் ISOCELL HM6 ப்ரைமரி கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. மேலும் இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது 5ஜி, ப்ளூடூத் 5.3, க்ளோநாஸ், கலிலியோ, என்எப்சி, யூஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது
சென்சார்களை பொறுத்தவரை இது ஆக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், இ-காம்பஸ், கைரோஸ்கோப், ஐஆர் பிளாஸ்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது, கூடவே ஏஐ ஆதரவு கொண்ட ஃபேஸ் அன்லாக் அம்சத்தை ஆதரிக்கிறது.
கடைசியாக இது டால்பி அட்மோஸிற்கான ஆதரவு உடனான சிங்கிள் ஸ்பீக்கர் உடன் வருகிறது. போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பரில் சீனாவில் அறிமுகமான ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ (Redmi Note 13R Pro) மாடலுடன் ஒற்றுப்போகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








