விட்ராதீங்க சார்.. ரூ.20,000 ரேட் கம்மி.. OIS கேமரா.. 12GB ரேம்.. 4900mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
சாம்சங் பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்ற சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Samsung Galaxy S24 Plus) போனுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்போது, ரூ.20,000 விலை குறைப்பில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். கியூஎச்டிபிளஸ் ரெசொலூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் பேட்டரி போன்ற பீச்சர்களில் மிரளவிடுகிறது. விவரம் இதோ.
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் போனின் விலை ரூ.79,999 பட்ஜெட்டில் இருந்தது. இப்போது வெறும் ரூ.59,999 விலைக்கு ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.20,000 விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். இந்த விலை குறைப்புக்கு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தேவையில்லை. நேரடி விலை குறைப்பில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் அம்சங்கள் (Samsung Galaxy S24 Plus Specifications): இந்த சாம்சங் போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கேலக்ஸி ஏஐ பீச்சர்களுடன் ஒன் யுஐ 6.1 (One UI 6.1) கிடைக்கிறது. சாம்சங் எக்ஸினோஸ் 2400 டெகா கோர் (Samsung Exynos 2400 Deca Core) சிப்செட் மற்றும் எக்ஸ்கிளிப்ஸ் 940 ஜிபியு (Xclipse 940 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவில் கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. பிரீமியம் மாடலாக இருப்பதால், 8K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் 3X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zooming) சப்போர்ட் உள்ளது.
டிரிபிள் ரியர் சிஸ்டமுடன் 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கேமரா கிடைக்கிறது. மெயின் மற்றும் டெலிபோட்டோவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் போனில் 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.
பேட்டரி பிரீமியமாக கிடைக்கிறது. ஏனென்றால், கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் (Qi Wireless Charging), வயர்லெஸ் பவர்ஷேர் (Wireless PowerShare) மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த சார்ஜிங்களுடன் 4900mAh பேட்டரி கிடைக்கிறது. பேட்டரியுடன் 7.7 எம்எம் தடிமன் உள்ளது. IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் போனின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், 5ஜி எஸ்ஏ & என்எஸ்ஏ (5G SA & NSA), 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) மற்றும் கோபால்ட் வயலெட் (Cobalt Violet) கலர்களில் வருகிறது.


Click it and Unblock the Notifications








