விட்றா வண்டிய.. முழுசா 40% டிஸ்கவுண்ட்.. 200MP கேமரா கொண்ட இந்த Samsung போன் மீது ரூ.35,000 விலை குறைப்பு!
பிளிப்கார்ட் வலைத்தளமானது சாம்சங் நிறுவனத்தின் பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது 40% நேரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதாவது அசல் விலையிலிருந்து ரூ.35,000-ஐ குறைத்துள்ளது. அதென்ன மாடல்? அதன் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra) ஸ்மார்ட்போன் மீது தான் 40% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,24,999 க்கு இந்தியாவில் அறிமுகமானது.

இருப்பினும் தற்போது இது பிளிப்கார்ட் (Flipkart) வழியாக ரூ.89,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது வங்கி சலுகைகள் (Bank Offers) அல்லது எக்ஸ்சேன்ஜ் சலுகை (Exchange Offer) எதுவுமே இல்லாமலேயே நேரடியாக ரூ.35,000 விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து சாம்சங் ஆக்சிஸ் பேங்க் சிக்னேச்சர் கிரெடிட் கார்டுக்கு ரூ.2500 வரையிலான தள்ளுபடி, சாம்சங் ஆக்சிஸ் வங்கி இன்ஃபினைட் கிரெடிட் கார்டுக்கு ரூ.5000 வரையிலான தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியான ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்தால் ரூ59,000 வரையிலான தள்ளுபடி கிடைக்கும் என்றும் பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

இந்த ஆபர்களை பயன்படுத்தி கொள்ளலாமா? ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால்.. நிச்சயம் இதுவொரு நல்ல ஆஃபர் ஆகும். ஒருவேளை உங்களுக்கு.. "சாம்சங் எஸ்23 அல்ட்ராவை நம்பி வாங்கலாமா.. வேண்டாமா?" எஎன்கிற கேள்விக்கு விளக்கமான பதில் தேவைப்பட்டால்.. இந்த ஸ்மார்ட்போனை ஏன் வாங்கலாம் என்பதற்கான 4 காரணங்கள் இதோ:
நம்பி வாங்க காரணம் 01 - இதன் கேமரா செட்டப்: அறிமுகப்படுத்தப்பட்டு 1 ஆண்டுக்கும் மேலான பிறகும் கூட,கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவானது, சந்தையில் கிடைக்கும் "தி பெஸ்ட் கேமரா போன்" ஆக திகழ்கிறது. இது பல்வேறு ஒளி நிலைகளில் பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும் திறனை கொண்டுள்ளது.

இதன் கேமரா செட்டப்பில், 200 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் + 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் + 10x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.
நம்பி வாங்க காரணம் 02 - இதன் டிஸ்பிளே: கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவானது கண்களை ஈர்க்கும் 6.8-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சாம்சங் இதை டைனமிக் அமோஎல்இடி 2எக்ஸ் பேனல் என்று அழைக்கிறது. இது நம்பமுடியாத அளவிற்கு பிரகாசமானதாக மற்றும் தெளிவானதாக இருக்கிறது. மேலும் இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10 பிளஸ் போன்றவைகளையும் ஆதரிக்கிறது.

நம்பி வாங்க காரணம் 03 - இதன் ப்ராசஸர்: இப்போதைக்கு ஒட்டுமொத்த டெக் உலகமும் லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பற்றித்தான் பேசுகிறது. இதற்கு முந்தைய சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2-வை தான் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா பேக் செய்கிறது. இன்றைய தரத்தின்படி, இது மிகவும் வேகமான மற்றும் சக்திவாய்ந்த சிப்செட் ஆகும்.
நம்பி வாங்க காரணம் 04- இதன் எஸ் பென் ஆதரவு: கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவை வாங்குவதற்கு எஸ் பென் ஸ்டைலஸ் ஒரு முதன்மையான காரணங்களில் ஒன்றாகும். இது குறிப்புகளை எடுப்பது, வரைதல் மற்றும் நேவிகேஷன் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய பல்துறை கருவியாகும்!


Click it and Unblock the Notifications








