Home
Mobile

நான்கு வருடங்களையும் தாண்டி விற்பனையில் முதலிடம் பிடித்த ஒன்பிளஸ் ரகசியம் என்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை நாளுக்கு நாள் வேகமாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. வருடத்தின் ஆரம்பத்தில் சற்று மந்தமாக ஊர்ந்து கொண்டிருந்த சந்தை இந்த ஆண்டின் இரண்டாம் நிலையில் விறுவிறுப்படைந்தது.

By Sharath
நான்கு வருடங்களாக விற்பனையில் முதலிடம் பிடித்த ஒன்பிளஸ் ரகசியம் என்ன.?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை நாளுக்கு நாள் வேகமாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. வருடத்தின் ஆரம்பத்தில் சற்று மந்தமாக ஊர்ந்து கொண்டிருந்த சந்தை இந்த ஆண்டின் இரண்டாம் நிலையில் விறுவிறுப்படைந்தது. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்த ஆண்டு வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளது. பயனர்கள் அதிக அளவில் பிரீமியம் சமர்ட்போன் வாங்குவதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

சூப்பர் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் பற்றி பேசுகையில், நம் அனைவருக்கும் நினைவில் வருவது இந்த ஆண்டின் சிறந்த விற்பனை சாதனை படைத்த ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் தான். 2018 ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன் விற்பனையாளர் விருது ஒன்ப்ளஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சந்தை மூலம் முன்னணி நிறுவனங்களான சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்களை சந்தையில் பின்னுக்கு தள்ளி இருக்கிறது ஒன்ப்ளஸ் நிறுவனம்.

ஒன்ப்ளஸ் 6 சாதனை

ஒன்ப்ளஸ் 6 சாதனை

கியூ2(Q2) 2018 இல் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்ப்ளஸ் 6, ஒன்ப்ளஸ் நிறுவனத்திற்கு நினைத்துப் பார்க்க முடியாத விற்பனை சாதனையை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்ப்ளஸ் இன் அசுர வளர்ச்சி, ஆச்சரியப்படுத்தும் விதமாகத் தனது பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் விற்பனை 284 விழுக்காடுகள் உயர்ந்துள்ளது. இன்னும் 4 ஆண்டுகளில் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் சாதனைகளை ஒன்ப்ளஸ் நிறுவனமே முறியடிக்குமென்கிறது அவர்களின் விற்பனை.

 ஒன்ப்ளஸ்  பயனர்கள் அனைவரும் ஒன்ப்ளஸ் ரசிகர்களாக மாறியுள்ளனர்

ஒன்ப்ளஸ் பயனர்கள் அனைவரும் ஒன்ப்ளஸ் ரசிகர்களாக மாறியுள்ளனர்

ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன் இன் இந்த வெற்றி ஒரு இரவில் வந்தது அல்ல. ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொன்றும் தேர்தெடுக்கப்பட்ட கை சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களால் பயனாளர்களுக்கு ப்ரைத்தியேகமாக தயாரிக்கப்பட்டது. ஒன்ப்ளஸ் தயாரிப்புகள் புதிய தொழிநுட்பத்துடன் புதிய டிசைன்னுடன் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுடன் உருவாக்கப்படுகிறது. உங்கள் பணத்திற்கு மதிப்பளிக்கும் சூப்பர் பிரீமியம் தயாரிப்புகளையே ஒன்ப்ளஸ் வழங்குகிறது.

ஒன்ப்ளஸ் தனது வாடிக்கையாளர்களை மனதில் வைத்து தன் தயாரிப்புகளை எந்தவித சமரசமும் இல்லாமல் தயாரித்து வருகிறது. பயனர்களின் மனதை மகிழ்விக்கும் விதத்திலேயே அதன் ஒவொரு படைப்புகளும் இருந்திருக்கிறது. ஒன்ப்ளஸ் தயாரிப்புகளை பயன்படுத்திய பிறகு அதன் ஆற்றலை உணர்த்தவர்கள் ஒன்ப்ளஸ்
பயனர்கள் அனைவரும் ஒன்ப்ளஸ் ரசிகர்களாக மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்ப்ளஸ் இரு வழி தொடர்புநிலை

ஒன்ப்ளஸ் இரு வழி தொடர்புநிலை

ஒன்ப்ளஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் நிறுவனத்துடன் தொடர்பில் இருக்க இரு வழி தொடர்புநிலையை ஒன்ப்ளஸ் ரசிகர்களுக்காக உருவாகியுள்ளது. இதில் ஒன்ப்ளஸ் ரசிகர்கள் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்புகள் பற்றி தங்களின் கருத்துக்களையும் சந்தேகங்களையும் நேரடியாக ஒன்ப்ளஸ் நிறுவனத்துடன் தெரிவிக்கலாம்.

தனது ரசிகர்களுக்காக பாப் அப் நிகழ்வுகளை ஒன்ப்ளஸ் நிறுவனம் உலகம் முழுதும் நடக்கும் விதம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த முயற்சி ஒன்ப்ளஸ் ரசிகர்கள் மற்றும் ஆர்வமுள்ள பயனர்களை ஒற்றுமையுடன் தனது நிறுவனத்தின் குழுவோடு தொடர்புகொள்ள நேரடி வாய்ப்பளிக்கிறது. அத்துடன் ஒன்ப்ளஸ் தயாரிப்புகளின் விற்பனையை நேரடியாக தன் ரசிகர்களுடன் ஒன்ப்ளஸ் பாப் அப் நிகழ்வுகளில் தனது ஸ்டோர்களில் விற்பனையும் செய்கிறது ஒன்ப்ளஸ் நிறுவனம்.

"நெவர் செட்டில்"

ஒன்ப்ளஸ் பாப் அப் நிகழ்வுகளில் நீண்ட வரிசையில் ஒன்ப்ளஸ் ரசிகர்கள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளின் அனுபவத்தை உணரக் குவிந்துகொண்டே இருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் வியக்கத்தக்க ரசிகர் படலத்தை வெறும் நான்கு ஆண்டில் இந்திய சந்தையில் குவித்துள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். முன்னணி நிறுவனங்களால் இன்று வரை செய்ய முடியாத பல சாதனைகளைச் செய்துள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம்.

"ஓபன் இயர்ஸ்" நிகழ்வு மற்றும் ஒன்ப்ளஸ் பாப் அப் நிகழ்வுகளின் வழியே ஒன்ப்ளஸ் பயனர்களுடன் தொடர்பில் இருக்கிறது ஒன்ப்ளஸ் நிறுவனம். ஒன்ப்ளஸ் இன் "நெவர் செட்டில்" மோட்டோ படி பயனரின் கருத்துக்களை எடுத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு தர அம்சங்களை மேம்படுத்துவதற்கு நிறுவனம் எப்போதுமே தயாராக இருக்கிறது. இந்தச் சேவையானது பயனர்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் உருவாக்க உதவுகிறது என்கிறது ஒன்ப்ளஸ் நிறுவனம்.

6,000 பாராட்டு டிக்கெட்

6,000 பாராட்டு டிக்கெட்

சுவாரஸ்யமாக, ஒன்ப்ளஸ் அதன் ரசிகர்களுக்கு ஸ்டார் வார்ஸ் ஜெடாய் மற்றும் அவென்ஜர்ஸ் ஆகிய பிரத்தியேக திரைப்பட திரை விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியது. குறிப்பாக ஒன்ப்ளஸ் 6 மார்வெல் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியான போது பேடியம்(paytm) உடன் இணைந்து ஒன்ப்ளஸ் 6,000 பாராட்டு டிக்கெட்களை கொடுத்தது.

இத்தகைய வெளிப்படையான மற்றும் ஆரோக்கியமான பிராண்ட்-நுகர்வோர் உறவு, இந்தியா போன்ற சந்தைகளில் நிறுவனத்தின் வெற்றிக்கான முக்கிய காரணமாக திகழ்கிறது. இந்திய சந்தையில் உள்ள சவால்கள் மற்றும் போட்டிகளை சமாளித்து இன்றும் நிலைத்து நிற்கிறது. மற்றொரு முக்கிய காரணம் ஒன்ப்ளஸ் இன் மென்பொருள் மற்றும் வன்பொருள் இன் தரமான தயாரிப்புகளாகும். வரும் ஆண்டுகளில் உயர் தரமான தயாரிப்புகள் மற்றும் செயல்களின் மூலம் பயனர்களின் உறவு மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது ஒன்ப்ளஸ் நிறுவனம்.

Best Mobiles in India

English summary
4 years of 'Creating Together with its Fans' has brought OnePlus to the top : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X