யாரு தான் வாங்க மாட்டாங்க! ரூ.8499க்கு 12GB ரேம், 4 வருஷம் Lag Free Fluency, 10 5ஜி பேண்ட், 48MP சோனி AI கேம்!
ரூ.9,000 க்குள் என்கிற பட்ஜெட்டில்.. 4 வருடங்களுக்கு லேக் அப்ரீ ஃப்லுயன்சி (4 Years Lag Free Fluency) என்கிற வாக்குறுதிக்காகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். போதாக்குறைக்கு இது 10 5ஜி பேண்ட்களுக்கான (10 5G Bands) ஆதரவு, விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) அம்சத்தின் கீழ் 12ஜிபி வரை ரேம் (Up to 12GB RAM), ஏஐ ஆதரவு கொண்ட 48எம்பி சோனி கேமரா (48MP Sony AI Camera) வேற!
என்ன மாடல்? இது டெக்னோ பாப் 9 5ஜி (Tecno POP 9 5G) ஸ்மார்ட்போன் ஆகும். மிகவும் சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமானது. கடந்த ஆண்டு அறிமுகமாகும் போது இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 64ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் மட்டுமே வெளியானது.

தற்போது அமேசான் இந்தியா வலைத்தளம் (Amazon India Website) வழியாக இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷன் 29% நேரடி தள்ளுபடியை பெற்று அசல் எம்ஆர்பி விலையான ரூ.11,999 க்கு பதிலாக ரூ.8499 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலை மிட்நைட் ஷேடோ ( Midnight Shadow), அஸூர் ஸ்கை (Azure Sky) மற்றும் அரோரா க்ளவுட் (Aurora Cloud) ஆகிய 3 கலர் ஆப்ஷன்களிலும் பிரதிபலிக்கிறது.
வடிவமைப்பை பொறுத்தவரை டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனின் பாடி ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் (IP54 Rating) உடன் வருகிறது. டெக்னோவின் கூற்றுப்படி இது லேசான தூறல்கள் மற்றும் நீர் தெறிப்பிற்கு எதிராக செயல்படும். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.6 இன்ச் எல்சிடி பேனலை (LCD Display) கொண்டுள்ளது.
ஒப்பீட்டளவில், டெக்னோ பாப் 8 (Tecno POP 8) ஸ்மார்ட்போனில் நாம் கண்ட 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) உடனான டிஸ்பிளேவை விட, இது ஒரு நல்ல மேம்படுத்தலாகும். சிப்செட்டை பொறுத்தவரை டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6030 சிப்செட் (MediaTek Dimensity 6300 SoC) உடன் வருகிறது. இது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
யுனிசாக் டி606 சிப்செட் (Unisoc T606 Chipset) கொண்டு இயக்கப்படும் டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது இது ஒரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாகும். கேமராக்களை பொறுத்தவரை, டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனில் 48எம்பி சோனி ஏஐ ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. ஒப்பிடுகையில், டெக்னோ பாப் ஸ்மார்ட்போனில் 12எம்பி பிரைமரி கேமரா தான் இருந்தது. ஆனால் அதுவும் 8எம்பி செல்பீ கேமராவையே கொண்டிருந்தது.
பேட்டரி மற்றும் பாஸ்ட் சர்ஜிங்கை பொறுத்தவரை, டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இந்த போன் என்எப்சி (NFC) ஆதரவுடன் வருகிறது. ரூ.8,499 என்கிற விலையில் என்எப்சி ஆதரவு இருப்பது அரிதான விஷயமாகும். கடைசியாக இது டூயல் டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்களையும் (Dual Dolby Atmos Speakers) கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








