ஆஃபர் விலையில் Pixel 7a விற்பனை.. கண்ணை மூடிட்டு வாங்க 4 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 2 காரணங்கள்!
சொன்னபடியே மே 11 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமான கூகுள் (Google) நிறுவனத்தின் பிக்சல் 7ஏ (Pixel 7a) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை பிளிப்கார்ட் (Flipkart) தொடங்கி உள்ளது. பிக்சல் 6எ உடன் ஒப்பிடும் போது, இது பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இருப்பினும் பிக்சல் 7ஏ-வை நம்பி வாங்கலாமா? வேண்டாமா? (Buy or Not) என்கிற குழப்பம் அல்லது சந்தேகம் உங்களிடம் இருந்தால்.. கூகுளின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனை ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கான 4 காரணங்களும் (Reasons to Buy), ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்பதற்கான 2 நியாயமான காரணங்களும் (Reasons to skip) இதோ:

முதலில் பிக்சல் 7ஏ-வின் விலை நிர்ணயம் மற்றும் விற்பனை சலுகைகளை பார்த்துவிடலாம். இந்த ஸ்மார்ட்போனின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், பிளிப்கார்ட் வழியாக ரூ.43,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. எச்டிஎப்சி (HDFC) வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் பிக்சல் 7ஏ-வின் விலையை ரூ.39,999 ஆக குறைக்க முடியும்.
பிக்சல் 7ஏ-வை நம்பி வாங்குவதற்கான 4 காரணங்கள்: முதல் மற்றும் முக்கிய காரணம் - பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனின் கேமராக்கள் தான். இந்தியாவில் ரூ.40,000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் எந்த ஸ்மார்ட்போனில் இல்லாத அளவிற்கு இது "சிறந்த கேமரா எக்ஸ்பீரியன்ஸ்" (Best Camera Experience) வழங்குகிறது.
இரண்டாவது காரணம்: பிக்சல் 6ஏ உடன் ஒப்பிடும்போது பிக்சல் 7ஏ-வின் டிஸ்பிளே மிகவும் பிரகாசமானதாகவும், துடிப்பானதாகவும் (Better Display) உள்ளது. இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருவதால் பிக்சல் 6ஏ-வை விட மென்மையான அனுபவத்தையும் வழங்குகிறது. மேலும் இது எல்லார் கைகளுக்குள்ளும் கட்சிதமாக பொருந்தும்படியான 'காம்பாக்ட்' ஆன வடிவமைப்பையும் பெற்றுள்ளது.
மூன்றாவது காரணம்: சாஃப்ட்வேர் என்று வரும்போது இது பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களை தட்டித்தூக்கும். பிக்சல் 7ஏ-வை விட வேகமான யூஸர் இன்டர்பேஸை (Best User Interface) வழங்கும் ஒரு ஸ்மார்ட்போன்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மேலும் இதில் ப்ளோட்வேர் இருக்காது; நிகழ்நேர மொழிபெயர்ப்பு, சிறந்த கால் மேனேஜ்மென்ட் போன்ற அம்சங்களும் கிடைக்கும்.
நான்காவது மற்றும் கடைசி காரணம்: பிக்சல் 7-வின் பெர்ஃபார்ம்மென்ஸ் (Good Performance). இது கூகுளின் பிளாக்ஷிப் சிப்செட் ஆன டென்சர் ஜி2 (Tensor G 2) மூலம் இயக்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் இதே சிப்செட் தான் பிக்சல் 7 சீரீஸையும் (Pixel 7 Series) இயக்குகிறது. ஒட்டுமொத்தமாக இந்த போனின் கேமிங் (Gaming) மற்றும் மல்டி-டாஸ்கிங் (Multi tasking) பெர்ஃபார்ம்மென்ஸில் என்ஹா குறையும் சொல்ல முடியாது.
பிக்சல் 7ஏ-வை வாங்காமல் தவிர்க்க 2 காரணங்கள்: முதல் காரணம் - முந்தைய பிக்சல் போன்களை போலவே இதனுடனும் சார்ஜர் (Charger) அனுப்படாது. அதாவது நீங்கள் புதிய 18W சார்ஜரை பணம் கொடுத்து வாங்க வேண்டும் அல்லது பழைய சார்ஜரை பயன்படுத்த வேண்டும். இரண்டாவது காரணம்- இதிலுள்ள டூயல் ஸ்பீக்கர்ஸ் (Dual Speakers) அவ்வளவு சிறப்பாக இல்லை!


Click it and Unblock the Notifications








