Home
Mobile

OnePlus-ன் பொங்கல் பரிசு.. ஜன.23 வரை காத்திருக்க முடியாது போலயே.. OnePlus 12-ன் சரியான இந்திய விலை இதுதான்!

எப்போது 2024 தொடங்கும்? எப்போது புதிய மாடல்களை அறிமுகம் செய்யலாம் என பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல்லை கடித்துக்கொண்டு காத்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த போன் எப்போது அறிமுகமாகும் என்று பலரும் காத்திருக்கும் ஒரு மாடலென்றால் அது ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஆகத்தான் இருக்கும்!

உங்களில் பலருக்கும்.. ஒன்பிளஸ் 12 ற்கனவே சீன சந்தையில் அறிமுகமாகி விட்டது என்பது தெரிந்து இருக்கலாம். கூடவே இது வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளதும் தெரிந்து இருக்கலாம்.

ஜன.23 அறிமுகமாகும் OnePlus 12-ன் சரியான இந்திய விலை இதுதான்!

ஆனால் தற்போது வரை ஒன்பிளஸ் 12 பற்றி பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் உண்டு என்றால்.. அது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் தான். சீனாவில் வெளியான அதே விலையை இந்தியாவிலும் எதிர்பார்ப்பது அவ்வளவு புத்திசாலித்தனமான காரியம் அல்ல.

ஏனென்றால் சீனாவில் ஒன்பிளஸ் 12 -ன் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் (இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக) ரூ.59,450 க்கு வாங்க கிடைக்கிறது. நிச்யமாக இந்த விலையை இந்தியாவில் எதிர்பார்க்க முடியாது. ஓராண்டுக்கு முன் அறிமுகமான ஒன்பிளஸ் 11 மாடலே தற்போது வரை ரூ.56,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜன.23 அறிமுகமாகும் OnePlus 12-ன் சரியான இந்திய விலை இதுதான்!

அப்படியானால், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் சரியான இந்திய விலை நிர்ணயம் என்ன? இதை கண்டுபிடிக்க நாம் 4 அடிப்படை விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். முதல் விஷயம் - ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் நிச்சயம் சாம்சங் மற்றும் ஆப்பிளின் பிளாக்ஷிப் போன்களை காலி செய்ய வேண்டும் என்கிற முனைப்பை கொண்டிருக்கும். இதனால் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் விலை அவைகளுடன் போட்டியிடும்படி நிர்ணயம் செய்யப்படும்.

இரண்டாவது விஷயம் - உதிரிபாகங்கள் மற்றும் உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ளதால், பெரும்பாலான நிறுவனங்களுக்கு தத்தம் பழைய விலை புள்ளிகளை பராமரிப்பதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றன. இதனால் தானாகவே ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் விலை அதிகரிக்கும்.

ஜன.23 அறிமுகமாகும் OnePlus 12-ன் சரியான இந்திய விலை இதுதான்!

மூன்றாவது விஷயம் - ஒன்பிளஸ் 12 பேக் செய்யும் பிரீமியம் அம்சங்கள். சந்தேகத்திற்கு இடமின்றி ஒன்பிளஸ் 11 உடன் ஒப்பிடும் போது ஒன்பிளஸ் 12 பல குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை பெற்றுள்ளது. இது சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 processor), மேம்படுத்தப்பட்ட 4த்-ஜென் ஹசல்பிளாட் கேமரா செட்டப்பை (4th-Gen Hasselblad camera system) கொண்டுள்ளது.

மேலும் இது 4600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் அமோஎல்இடி டிஸ்பிளே (AMOLED Display), ஐபி64 ரேட்டிங் (, IP64 rating), 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் (Wireless charging) போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. இதெல்லாம் சேர்ந்து தான், இந்தியாவில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் இறுதி விலையில் (Final Price in India) நிர்ணயம் செய்யும்.

ஜன.23 அறிமுகமாகும் OnePlus 12-ன் சரியான இந்திய விலை இதுதான்!

கடைசி மற்றும் நான்காவது விஷயம் - ஒன்பிளஸ் 11 வெளியீட்டு விலைகளுடன் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது 5 - 10 சதவீதம் விலை உயர்வை காணும். இதெல்லாம் வைத்து பார்க்கும் போது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் என்னவாக இருக்கும் என்பதை எங்களால் யூகிக்க முடிகிறது.

ஒன்பிளஸ் 12-ன் சரியான இந்திய விலை நிர்ணயம்: ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் விலை ரூ.59,999 முதல் ரூ.62,999 வரைக்குள் இருக்கும். மறுகையில் உள்ள 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.64,999 முதல் ரூ.67,999 வரைக்குள் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
4 Things Helps to Find Exact Indian Price of OnePlus 12 Smartphone Which Launching on Jan 23
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X