VIVO-வா கொக்கா.. 4-ஸ்க்ரீன் மோட், 7000mAh பேட்டரி, 200MP கேமராவுடன் புது போன்.. எந்த மாடல்?
விவோ எக்ஸ் போல்ட் 6 (Vivo X Fold 6) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இந்த போல்டபிள் (Foldable) போனின் முக்கிய சாஃப்ட்வேர் அம்சம் ஒன்றை விவோ நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தி உள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வான மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் சாஃப்ட்வேர் அனுபவத்தை வழங்கும் நோக்கில், விவோ நிறுவனம் ஆனது அதன் விவோ எக்ஸ் போல்ட் 6 ஸ்மார்ட்போனில் புதிய 'மல்டிடாஸ்கிங்' வசதிகளை, அதாவது ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யும் வசதிகளை சேர்த்து உள்ளது.

விவோவின் தயாரிப்பு மேலாளரான ஹான் போக்ஸியாவ் (Han Boxiao), வெய்போ (Weibo) பதிவு ஒன்றின் மூலம், விவோ எக்ஸ் போல்ட் 6 ஸ்மார்ட்போனில் அடாமிக் வொர்க்பெஞ்ச்சின் (Atomic Workbench) ஒரு பகுதியாக பேரலல் மோட் (Parallel mode) என்கிற புதிய அம்சம் இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு வரை, போல்டபிள் போன்களுக்கான ஆர்ஜின்ஓஎஸ் 6-ல் ஒரு மேஜர் ஆப்பை திறந்து வைத்துக்கொண்டு, மற்ற நான்கை பின்னணியிலோ அல்லது சிறிய விண்டோக்களிலோ (Windows) மட்டுமே வைத்திருக்க முடிந்தது. அப்போது நீங்கள் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்திவிட்டு, மற்றவற்றை அவ்வப்போது மட்டுமே பார்க்க முடிந்தது.
ஆனால் இந்த புதிய அப்டேட்டின் கீழ், ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீனை நான்கு சமமான விண்டோக்களாக பிரித்து, ஒரே நேரத்தில் நான்கு ஆப்களை இயக்க முடியும். இதில் ஒவ்வொரு ஆப்பும் முழுமையாக தெரியும் வகையிலும், உடனடியாக பயன்படுத்தும் வகையிலும் செயல்படும் நிலையில் இருக்கும். இந்த அம்சம் - பயனர்கள் பெரிய இன்னர் ஸ்க்ரீனை முழுமையாக பயன்படுத்தவும், அதன் மூலம் உற்பத்தித்திறனை கணிசமாக அதிகரிக்கவும் உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
உதாரணமாக, ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது, ஒரு பொருளுக்கான மிக குறைந்த விலையை கண்டறிய நான்கு ஷாப்பிங் ஆப்களை அருகருகே திறந்து வைத்துக்கொள்ளலாம். அல்லது பயணத்தின்போது, மியூசிக் ஆப், மேப்ஸ் (maps), நேவிகேஷன் ஆப் மற்றும் இண்டர்நெட் ஆகியவற்றை ஒரே நேரத்தில் திறந்து வைத்து, நீங்கள் செல்ல விரும்பும் இடங்களை கண்காணிக்கலாம்.
நான்கு ஆப்களும் எந்தவித தாமதமோ அல்லது அதிக வெப்பமடைதலோ இன்றி சீராக இயங்குவதை உறுதிசெய்ய, ஆண்ட்ராய்டின் கோர் சிஸ்டம் கோட்-ஐ (core system code) தாங்கள் மாற்றியமைக்க வேண்டியிருந்ததாக விவோவின் தயாரிப்பு மேலாளர் குறிப்பிடுகிறார். அதிகப்படியான பணிச்சுமையை கையாள்வதற்கும், அதே சமயம் பேட்டரி திறனை சேமிப்பதற்கும் ஏற்ற வகையில், சிப் (Chip) தயாரிப்பாளர்களுடன் இணைந்து இந்த போனின் பிராசஸரை (Processor) விவோ பிரத்யேகமாக வடிவமைத்துள்ளது.
விவோ எக்ஸ் போல்ட் 6 ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள்: டிப்ஸ்டர் எக்ஸ்பீரியன்ஸ் மோர் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் டூயல்-செல் பேட்டரி உடன் வரும் - அது 2,807mAh + 3,863mAh கெப்பாசிட்டியை கொண்டிருக்கும், இது 6670mAh ஒருங்கிணைந்த மதிப்பிடப்பட்ட மதிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதன் வழக்கமான திறன் 7000mAh ஆக இருக்க வாய்ப்புள்ளது.
மேலும் விவோ எக்ஸ் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போன் ஆனது, தற்போது மீடியாடெக்கின் மிகவும் சக்திவாய்ந்த சிப்செட்டான டைமென்சிட்டி 9500 உடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். இதெல்லாம் வட்ட வடிவிலான கேமரா மாட்யூலுக்குள் இருக்கும்
பாதுகாப்பிற்காக, விவோ எக்ஸ் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெறலாம். மேலும் இது உயர் மட்ட நீர் எதிர்ப்பு திறனை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் சரியான ஐபி ரேட்டிங் குறித்த விவரங்கள் இல்லை.


Click it and Unblock the Notifications