Home
Mobile

திடீர்னு 57% ஆபர்! இந்த 4 Samsung போன்களுக்கும்.. இனி செம்ம டிமாண்ட்!

இந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்கிற ஐடியா உங்களிடம் இருந்தால்.. உண்மையிலேயே உங்களுக்கு எங்கோ ஒரு அதிர்ஷ்ட மச்சம் இருக்கிறது என்றே கூற வேண்டும்!

ஏனெனில் திடீரென்று 4 பிரபலமான Samsung ஸ்மார்ட்போன்களின் மீது 57% வரை ஆபர் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!

அதென்ன ஆபர்?

அதென்ன ஆபர்?

குறிப்பிட்ட 4 சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மீது 57% வரை சலுகைகளை நமக்கு வழங்கப்போவது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான Flipkart ஆகும்.

மேலும் அந்த சலுகைகள், இம்மாத இறுதியில் நடக்கும் பிக் பில்லியன் டேஸ் (Big Billion Days Sale) வழியாக அணுக கிடைக்கும்!

செப்டம்பர் 23 - செப்டம்பர் 30 வரை!

செப்டம்பர் 23 - செப்டம்பர் 30 வரை!

அறியாதோர்களுக்கு பிளிப்கார்ட்டின் 2022 பிக் பில்லியன் டேஸ் விற்பனையானது, செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைகிறது.

மொத்தம் 8 நாட்கள் நீளும் இந்த விற்பனையானது அதன் போட்டியாளர் ஆன Amazon-இன் Great Indian Festival 2022 விற்பனை தொடங்கும் அதே நாளில் தொடங்குகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

என்னென்ன Samsung போன்கள் மீது 57% ஆபர் கிடைக்கும்?

என்னென்ன Samsung போன்கள் மீது 57% ஆபர் கிடைக்கும்?

Flipkart-இல் நடக்கும் சிறப்பு விற்பனையின் போது, சாம்சங்கின் 4 பட்ஜெட், மிட்-ரேன்ஜ், பிரீமியம் மற்றும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் மீது 57% வரையிலான தள்ளுபடி அணுக கிடைக்கும்.

அவைகள் - சாம்சங் Galaxy S21 FE 5G, சாம்சங் Galaxy S22+, சாம்சங் Galaxy F13 மற்றும் சாம்சங் Galaxy F23 5G மாடல்கள் ஆகும்.

இந்த 4 மாடல்களில் கேலக்ஸி எஸ்22 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஃப்23 மீதான சலுகைகள் இப்போதே அணுக கிடைக்கிறது.

Galaxy S21 FE 5G மீதான சலுகைகள்:

Galaxy S21 FE 5G மீதான சலுகைகள்:

சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி, நடக்கவுள்ள பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, Galaxy S21 FE 5G ஆனது 57% தள்ளுபடியின் கீழ் வாங்க கிடைக்கும்.அதாவது ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கும்.

கூடுதலாக ரூ.24,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையும் அணுக கிடைக்கும்.

நினைவூட்டும் வண்ணம், தற்போது வரையிலாக Galaxy S21 FE 5G ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ. 49,999 க்கு வாங்க கிடைக்கிறது; இதன் எம்ஆர்பி ரூ.74,999 ஆகும்!

Samsung Galaxy S22+ மீதான சலுகைகள்:

Samsung Galaxy S22+ மீதான சலுகைகள்:

தற்போது, சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் ஆனது ரூ.69,999 முதல் வாங்க கிடைக்கும்.

Flipkart-இல் இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,999 க்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் ரூ.88,999 க்கும் பட்டியலிடப்பட்டுள்ளது.

இவைகளின் எம்ஆர்பி விலை முறையே ரூ.1,01,999 மற்றும் ரூ.1,05,999 ஆகும்!

Samsung Galaxy F23 5G மீதான சலுகைகள்:

Samsung Galaxy F23 5G மீதான சலுகைகள்:

சாம்சங்கின் கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ரூ.13,499 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் விலையை நீங்கள் ரூ.10,999 வரை குறைக்கலாம். இதன் எம்ஆர்பி ரூ.23,999 ஆகும்.

Samsung Galaxy F13 மீதான சலுகைகள்:

Samsung Galaxy F13 மீதான சலுகைகள்:

கடைசியாக உள்ள சாம்சங் கேலக்ஸி F13 ஆனது ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கும். ஆனால் தற்போது வரையிலாக, Flipkart-இல் இந்த போனின் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.11,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
4 Samsung Smartphones Get Heavy Offers During Flipkart Big Billion Days Sale 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X