Home
Mobile

நம்பி வாங்க நச்சுனு 4 காரணம்.. தவிர்க்க 2 நியாயமான காரணம்.. ஆபர் விலையில் 8000mAh பேட்டரி OnePlus போன் SALE!

ஊர் கதை, உறவு கதையெல்லாம் பேசாமல்.. நேரடியாக பாய்ண்டுக்கு வருவோம். ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலாக நேற்று (மே.7) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு, இன்று (மே.8) விற்பனைக்கு வந்துள்ள ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 (OnePlus Nord CE 6) ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? வேண்டமா?

நம்பி வாங்க நச்சுன்னு 4 காரணங்கள்:
- அட்டகாசமான 144ஹெர்ட்ஸ் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளே
- ஸ்மூத் ஆன பெர்பார்மென்ஸ்ஸை வழங்கும சிப்செட்
- நல்ல பில்ட், கூடவே IP68 + IP69 + IP69K ரேட்டிங்ஸ்
- நீண்ட பேட்டரி லைஃப், கூடவே நல்ல பாஸ்ட் சார்ஜிங்.

வாங்காமல் தவிர்க்க நியாய மான 2 காரணங்கள்:
- ஒன்பிளஸ் நார்ட் சிஏ 6 ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் அல்ட்ரா-வைட் கெமர் (Ultra-wide camera) இல்லை.
- இதன் சிப்செட் ஒட்டுமொத்தமாக ஸ்மூத் ஆன பெர்பார்மென்ஸை வழங்கினாலும், பழைய நார்ட் சிஇ 5 மாடலுடன் ஒப்பிடும்போது ஆவரேஜ் ஆன கேமிங் பெர்பார்மென்ஸையே வழங்குகிறது.

OPINION: ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 மாடல் ஆனது பல விஷயங்களில் அதன் முந்தைய மாடலில் இருந்து வேறுபட்டதாக உள்ளது. இது தனது கவனத்தை வெறும் செயலாக்க திறனில் இருந்து, நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி மற்றும் முதன்மை ரக டிஸ்பிளே தரத்திற்கு மாற்றியுள்ளது.

பிரீமியம் உணர்வை தரும் ஒரு கட்டமைப்பிற்குள் பிரம்மாண்டமான 8000mAh பேட்டரியை பொருத்துவதன் மூலம், ஒன்பிளஸ் நிறுவனமானது கேமிங் ரசிகர்களை விட, நீண்ட நேரம் தொடர்ந்து பயன்படுத்தும் பயனருக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது என்றே கூறலாம்.

ஆக பிரமிக்க வைக்கும் 144ஹெர்ட்ஸ் 1.5கே டிஸ்பிளே, தொழில்துறையில் முன்னணி வகிக்கும் IP69K ரேட்டிங் மற்றும் நீண்ட பேட்டரி லைஃப் ஆகியவற்றை நீங்கள் விரும்பினால், ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனானது தற்போது, இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.30000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது.

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 5ஜி ஸ்மார்ட்போனிற்கு பதிலாக வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்களை கருத்தில் கொள்ளலாம்? அதாவது இந்த லேட்டஸ்ட் ஒன்பிளஸ் மாடலுக்கான பெஸ்ட் ஆல்ட்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்கள் என்னென்ன? மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷனை கருத்தில் கொள்ளலாம். இது அதே சிப்பை கொண்டுள்ளது மற்றும் அல்ட்ரா-வைட் கேமராவுடன் வருகிறது, ஆனால் சிறிய பேட்டரியை கொண்டுள்ளது. இதோடு நத்திங்போன் (4ஏ) மாடலும் அதே சிப்புடன் வரும் ஒரு நல்ல ஆப்ஷன் ஆகும். இது சிறந்த கேமரா செட்டப்பை வழங்குகிறது. ஆனால் சற்று சிறிய பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் கொஞ்சம் விலையும் அதிகம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.32,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 விற்பனை மற்றும் அறிமுக சலுகைகள்: இது இன்று அதாவது மே 8 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனையை தொடங்கியது. ஏர்லி பேர்ட் டீலின் ஒரு பகுதியாக, ரூ.2,000 உடனடி வங்கி தள்ளுபடியுடன் இது வாங்க கிடைக்கும். இது ஃப்ரெஷ் ப்ளூ, லூனார் பேர்ல் மற்றும் பிட்ச் பிளாக் ஆகிய 3 கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

நம்பி வாங்க நச்சுனு 4 காரணம்.. தவிர்க்க 2 நியாயமான காரணம்!
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.78-இன்ச் 1.5K 10-பிட் AMOLED டிஸ்பிளே
- 4என்எம் அடிப்படையிலான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட்
- 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 2MP இரண்டாம் நிலை லென்ஸ்
- 32MP செல்பீ கேமரா
- 80W SuperVOOC சார்ஜிங் உடனான 8,000mAh பேட்டரி
- IP66, IP68, IP69, மற்றும் IP69K ரேட்டிங்
Best Mobiles in India

English summary
4 Reasons to Buy Without Any Hesitation 2 Simple Reasons to Skip OnePlus Nord CE 6 And Alternatives
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X