Home
Mobile

நம்பி வாங்க 4 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 2 காரணங்கள்.. ஆபர் விலையில் கிடைக்கும் OnePlus Nord CE 4 Lite 5G!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன் ஆக இந்திய சந்தையில் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி (OnePlus Nord CE4 Lite 5G) மாடல் தற்போது ஆபர் விலையில் விற்பனையை தொடங்கியுள்ளது. மெகா ப்ளூ மற்றும் சூப்பர் சில்வர் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் அல்ட்ரா ஆரஞ்சு (Ultra Orange) என்று பெயரிடப்பட்ட மற்றொரு இந்தியா எக்ஸ்க்ளூஸிவ் கலர் வேரியண்ட்டிலும் (India Exclusive Colour Variant) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; இது வரும் நாட்களில் விற்பனைக்கு வரும்.

அதற்காக காத்திருக்கும் பொறுமை உங்களிடம் இல்லை என்றால்.. ஆரஞ்சு கலரில் உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றால்.. மீதமுள்ள 2 கலர் ஆப்ஷன்களில், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை இப்போதே நீங்க வாங்க விரும்பினால்.. இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்குவதற்கான 4 நல்ல காரணங்களும், வாங்காமல் தவிர்ப்பதற்கான 2 நியாயமான காரணங்களும் இதோ:

OnePlus Nord CE4 Lite 5G.. நம்பி வாங்க 4 காரணங்கள்!

முதலில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை, ஆபர் விலை நிர்ணயம் குறித்து பார்த்துவிடலாம். இது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.19,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.22,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஒன்கார்டு கிரெடிட் கார்டுகளில் ரூ.1,000 தள்ளுபடியைப் பெறலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் இருந்து இஎம்ஐ விருப்பங்களையும் பெறலாம். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் இந்தியா (OnePlus India) இணையதளம், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப்ஸ், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ், அமேசான் இந்தியா (Amazon India) ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோரமா, விஜய் சேல்ஸ் வழியாக வாங்கலாம்.

OnePlus Nord CE4 Lite 5G.. நம்பி வாங்க 4 காரணங்கள்!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்க 4 காரணங்கள்: முதல் காரணம் - இது பட்ஜெட் விலை மாடலாக இருந்தாலும் கூட ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரீமியம் / பிளாக்ஷிப் போன்களை போன்ற ஸ்டைலான டிசைனை கொண்டு உள்ளது.

இரண்டாவது காரணம் - பகல் நேங்களில் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் அட்டகாசமான அவுட்புட்களை வழங்குகிறது. இது ஓஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி சோனி எல்ஒய்டி-600 பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

OnePlus Nord CE4 Lite 5G.. நம்பி வாங்க 4 காரணங்கள்!

மூன்றாவது காரணம் - இதன் விவிட் டிஸ்பிளே. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. நான்காவது காரணம் - இதன் திடமான பேட்டரி மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட். இதற்கு முன் வெளியான எந்தவொரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிலும் இல்லாத அளவிலான பெரிய 5500எம்ஏஎச் பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இது 80W SUPERVOOC ஆதரவுடன் வருகிறது.

கூடவே இது 5W ரிவர்ஸ் சர்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. அதாவது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை வைத்து உங்களுடைய மற்ற டிவைஸ்களை சார்ஜ் செய்ய முடியும். சில அற்புதமான நிறைகளுடன், இந்த ஸ்மார்ட்போனில் கட்டாயம் கவனிக்க வேண்டிய 2 முக்கியமான குறைகளும் உள்ளன.

OnePlus Nord CE4 Lite 5G.. நம்பி வாங்க 4 காரணங்கள்!

முதல் மற்றும் முக்கிய குறை, புதிய நோர்ட் சிஇ 4 லைட் ஆனது கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் ஸ்மார்ட்போனில் உள்ள அதே ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்டை தான் பேக் செய்கிறது. ஸ்டோரேஜ் கட்டமைப்பு கூட அப்படியே உள்ளது. இரண்டாவதாக, இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் ஆனது லோ-லைட்டில் ஆவரேஜ் ஆன அவுட்புட்களையே வழங்குகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X