1 இல்ல.. 4 காரணங்கள் இருக்கு.. Nothing Phone 2a மாடலை கண்ண மூடிக்கிட்டு வாங்க!
ரூ.40,000-க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்பட்ட நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.25,000-க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகி, ஒட்டுமொத்த இந்தியர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த ஒரு காரணத்திற்காகவே நத்திங் போன் 2ஏ-வை வாங்கலாம் தான்!
இருப்பினும் விலையை மட்டுமே கருத்தில் கொண்டு ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்றால்.. நத்திங் போன் 2ஏ-வில் எப்படி என்ன ஸ்பெஷல்? இந்த ஸ்மார்ட்போனை வாங்க வேறென்ன காரணங்கள் உள்ளன? என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால்.. நத்திங் போன் 2ஏ மாடலை கண்களை மூடிக்கிட்டு வாங்குவதற்கான 4 காரணங்கள் இதோ:

முதலாவதாக.. தனித்துவமான யூசர் இன்டர்பேஸை (User Interface) வழங்குகிறது. பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் ஸ்டாக் ஆண்ட்ராய்டு எக்ஸ்பீரியன்ஸை (Stock Android Experience) வழங்கும் மறுகையில் இது பிரத்தியேகமான யுஐ எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது. இரண்டாவதாக.. இது 100எம்பி அல்லது 200எம்பி கேமரா அல்லது மிகப்பெரிய 6000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்யாமல் "கலவையான, மென்மையான மற்றும் நம்பகமான" அம்சங்களை பேக் செய்கிறது
மூன்றாவதாக.. இது சிங்கிள் சார்ஜில் ஒரு முழுவதுமான பேட்டரி லைஃப்-ஐ (Battery Life) மிகவும் அசால்ட் ஆக வழங்குகிறது. இதில் வயர்லெஸ் சார்ஜிங் இல்லை என்றாலும் கூட இதிலுள்ள 40W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் ஆனது 15-20 நிமிடங்களில் 50% பேட்டரியை நிரப்புகிறது. நான்காவதாக.. இதில் உள்ள டூயல் 50எம்பி கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) ஆனது பல்வேறு ஒளி நிலைகளில் ஈர்க்கக்கூடிய புகைப்படங்களை கைப்பற்றுகிறது.

நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.23,999 க்கு அறிமுகமாகி உள்ளது. 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக உள்ள ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.27,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே, பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் வழியாக மார்ச் 12 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். விற்பனையின் போது சில பிரத்யேக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கும். அவைகளை சரியாக பயப்படுத்தினால் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் ஃபைனல் ப்ரைஸ்-ஐ இன்னும் குறைக்க முடியும்.

நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: பேக் பேனலில் மூன்று கிளிஃப் எல்இடி ஸ்ட்ரிப்ஸ்களை (Glyph LED strips) கொண்டுள்ள நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனானது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ்-க்கான ஆதரவு உடனான 50எம்பி மெயின் கேமரா சென்சார் + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது.
டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப்பிற்கான ஐபி54 ரேட்டிங் உடன் வரும் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனானது எப்எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர் ஆதரவு உடனான 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது, டிஸ்பிளேவின் மேல்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது; இதில் இன்-டிஸ்பிளே ஃ பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட் உடன் வரும் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது. ஆண்ட்ராய்டு 14 அவுட் ஆஃப் தி பாக்ஸ் அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.


Click it and Unblock the Notifications








