ஆர்டர் தெறிக்குது.. ஆனாலும் Redmi 13 5G வாங்க தயக்கமா? நம்பி வாங்க 4 காரணங்கள்.. தவிர்க்க 3 காரணங்கள்!
சீன நிறுவனமான ஷாவ்மீ இந்தியாவில் "அதன் தொழிலை "தொடங்கிய 10வது ஆண்டு நிறைவை குறிக்கும் கொண்டாட்ட நிகழ்வின் போது 5 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்திருந்தது. அதில் பலருடைய கவனத்தை ஈர்த்தது ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் தான்.ஏனென்றால் இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ (Snapdragon 4 Gen 2 AE) சிப்செட்டுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். ஒருவேளை இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க திட்டமிட்டு இருந்தால்.. அதற்கு முன் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் நிறைகள் மற்றும் குறைகளை பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அந்த அடிப்படையில், ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) ஸ்மார்ட்போனை ஏன் நம்பி வாங்கலாம் என்பதறகான 4 நல்ல காரணங்களையும், ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்பதற்கான 3 நியாயமான காரணங்களையும் உங்களுக்காக இங்கே பட்டியலிட்டு உள்ளோம். அந்த காரணங்களை வைத்து இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாமா வேண்டாமா என்கிற முடிவை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.

ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனை ஏன் நம்பி வாங்கலாம் என்பதறகான 4 காரணங்கள்: முதலாவது காரணம் - இது ஸ்மூத் ஆன 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இரண்டாவது காரணம் - இது ஈர்க்கக்கூடிய செயல்திறனை வழங்குகிறது. மூன்றாவது காரணம் - பகல் நேரங்களில் இதன் கேமராக்கள் நல்ல அவுட்புட்களை வழங்குகிறது. நான்காவது காரணம் - இது டீசன்ட் ஆன பேட்டரி லைஃப்பை வழங்குகிறது.
ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனை ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்பதறகான 3 காரணங்கள்: முதல் காரணம் - இது பல எண்ணிக்கையிலான மூன்றாம் தரப்பு ஆப்களை கொண்டுள்ளது. இரண்டாவது காரணம் - இதன் டிஸ்பிளே ஸ்மூத் ஆக இருக்கிறது ஆனால் ப்ரைட் ஆனதாக இல்லை. இதன் டிஸ்பிளே ப்ரைட்னஸ் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்து இருக்கலாம். மூன்றாவது காரணம் - இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இல்லை.
ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி + 128ஜிபி ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கும், 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.15,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி நிறுவனம் இவைகளை "பரிந்துரைக்கப்பட்ட விலைகள்" என்று கூறுகிறது. இதுவே இறுதி விலையா என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனை ஹவாய் ப்ளூ, பிளாக் டயமண்ட் மற்றும் ஆர்க்கிட் பிங்க் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம். இந்த் ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா, நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ரீடெயில் சேனல்கள் வழியாக வாங்க கிடைக்கிறது.
ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டூயல் சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் ஸ்கின், 6.79-இன்ச் FHD+ IPS LCD டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, குவால்காம் 4nm ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 AE சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம் உடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது Samsung ISOCELL HM6 சென்சார் மற்றும் f/1.75 அபெக்ஷர் உடன் கூடிய 108 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டுள்ளது. இது 3x இன்-சென்சார் ஜூமிங்கை வழங்கும் என்று ரெட்மி நிறுவனம் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
மேலும் இது 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ், 5ஜி, 4ஜி LTE, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட், 5030mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








